பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
249

electric horsepower : மின் குதிரையாற்றல் : இது 746 வாட் மின்விசைத் திறனாகும்

electrician : மின்னியல் நுட்பாளர் : மின்விசைப் பயன்பாடு குறித்த கோட்பாடுகளிலும் நடைமுறை களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு நிபுணர்

electricity :(மின்.) மின்விசை : ஒட்ட மின்விசை என்பது இயங்கும் எலெக்ட்ரான்கள் ஆகும். நிலை மின்விசை என்பது நிலையாகவுள்ள எலெக்ட்ரான்கள்

electric motor : (மின்.) மின்னோடி : மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றுவதற்குரிய ஒர் எந்திரம்

electric potential : மின்னியக்காற்றல்

electric power : (எந்.பொறி.) மின்னாற்றல் : மின்விசை கொண்டு பணியாற்றும் வேகவீதம். இதனை வாட் அல்லது கிலோவாட் அளவுகளில் கணக்கிடுவர்

electric pyrometer : மின் உயர் வெப்பமானி : வெப்பநிலையைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு நுட்பமான உயர் வெப்பமானி. சூடாக்கும்போது பிளாட்டினத்தின் மின்தடை காரணமாக ஏற்படும் மாறுதல்களை இது பயன்படுத்திக் கொள்கிறது

electric steel : (உலோ.) மின் எஃகு : ஒரு மின் உலையில் தயாரிக்கப்படும் உயர்தரமான எஃகு. இந்த முறையில் கந்தகமும் பாஸ் விரமும் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடும். மிகக் குறைந்த குறைபாடுகளுடன் தூய எஃகினைத் தயாரிப்பதற்கு மற்ற முறைகளைவிட இது மிகவும் சிறந்தது

electrification : (மின்.) மின்னூட்டம் : ஒரு பொருளுக்கு நிலைமின்னூட்டம் அளித்தல் electroacoustic : (மின்.) மின் ஒலியியல் : ஒலியியல் மற்றும் மின்னியல் பண்பியல்புகளைக் கொண்ட சாதனங்கள்

electro cardiograph : (மின்.) மின்னணு இதயத் துடிப்புப் பதிவு கருவி : இதயத் துடிப்பினை அள விட்டு. பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனம்

electro-chemical action : மின் வேதியியல் வினை : மின்னோட்டத்தைப் பயன்படுத்தி வேதியியல் வினையை உண்டாக்குதல் அல்லது அத்தகைய வினையை நிலைபெறச் செய்தல்

electrode : (மின்.) மின்முனை : வெற்றுக்கல மின்னோட்டத்தில் இருகோடி முனைகளில் ஒன்று

electro-forming : (குழை.) மின் உருவாக்கம் : இரும்பினால் மின்முலாமிடுவதன் மூலம் ஒரு வார்ப்படப் பள்ளத்தை உருவாக்கும் முறை

electro-lier : (மின்.) மின் விளக்குத் தொகுதி : முகட்டில் தொங்க விடுவதற்கான கொத்தான மின் விளக்குகளின் தொகுதி

electrolysis : (மின்.பொறி.) மின்னாற்பகுத்தல் : ஒரு பொருளினுள் மின்னோட்டத்தைச் செலுத்தி அதனை அதன் ஆக்கக்கூறுகளாகப் பகுத்தல்

electrolyte : (மின்.) மின்பகுப்பான் : மின்னாற் பகுப்பதற்குப் பயன்படும் நீர்மப் பொருள், அமிலங்கள், உப்பு மூலங்கள், உப்புகள் ஆகிய அனைத்தும் மின்பகுப்பான்களேயாகும்

electrolyte level : (தானி.) மின்பகுப்பான் அளவு : சேம மின்கலத்திலுள்ள தகடுகளிலுள்ள மின்பகுப்பானின் முறையான அளவு