பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

 electrolytic condenser : (மின்.) கொண்மி மின்பகுப்பான்

electrolytic copper : (உலோ.) மின்பகுப்பான் செம்பு : மின்பகுப்பான் செய்முறைகளின் மூலம் சல்பைடு தாதுக்களிலிருந்து முக்கியமாகத் தயாரிக்கப்படும் செம்பு

electrolytic corrosion : (மின்.) மின்பகுப்பான் அரிமானம் : நீருடன் தொடர்புடைய உலோகப் பொருள்கள் மின்னோட்டங்களுக்கு அருகில் இருக்கும்போது மின்னாற் பகுத்தல் மூலம் ஏற்படும் அரிமானம்

electrolytic iron : (உலோ.) மின்பகுப்பு இரும்பு : மின்பகுப்பான் செய்முறை மூலம் தயாரிக்கப்படும் மிகத் தூய்மையான இரும்பு. இதில் மிகச் சிறந்த காந்தப் பண்புகள் உள்ளன. எனவே இது காந்த மையச் சலாகையாகப் பயன்படுத்தப்படுகிறது

electrolytic rectifier : (மின்.) மின்பகுப்பான் திருத்தி : மின்-வேதியியல் தத்துவத்தினைப் பயன்படுத்தி மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுக் கருவி

electrolytic refining : மின்பகுப்பான் சுத்திகரிப்பு : மின்னாற்பகுத்தல் மூலம் உலோகங்களைச் சுத்திகரித்தல்

electro magnet : மின்காந்தம் : சுற்றி வரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச் சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப்பிழம்பு

electro magnetic field : (மின்.) மின்காந்தப் புலம் : ஒரு மின்காந்தத்தின் இரு துருவங்களுக்கிடையிலான அல்லது காந்த விளைவுள்ள பகுதி.இந்த புலத்தினூடே காந்தவிசைக்கோடுகள் பயணஞ்செய்யும்

electromagnetic induction : (மின்.) மின்காந்தத் தூண்டல் : ஒரு காந்தப் புலத்தின் காந்த விசைக் கோடுகளைக் குறுக்கே வெட்டும் ஒரு கம்பியில் அமைந்திருக்கும் தூண்டப்பட்ட மின் இயக்க விசை

electricmagnetic waves : (மின்.) மின் காந்த அலை : வானொலி அலைகள், ஒளி அலைகள், எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை

electromagnetism : (மின்.) மின்காந்த விசை : மின் விசையினால் உண்டு பண்ணப்படும் காந்த ஆற்றல்

electro motive : மின் இயக்கம் : ஒரு மின் கடத்தியின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி, அம்மின்னோட்டத்தை நிலை பெறச் செய்யும் விசை. இது ஒல்ட்டுகளில் அளவிடப்படும்

electromotive force of self induction : (மின்.) தற் தூண்டல் மின்னியக்க விசை : தனியொரு கம்பிச் சுருளில், அதன் சுற்றுகளுக் கிடையிலான தூண்டு விளைவு காரணமாக ஏற்படும் மின்னியக்க விசை

electrode : (விண்.) மின்வாய் : வெற்று மின் கல மின்னோட்டத்தில் இரு கோடி முனைகளில் ஒன்று

electrodynamic : (மின்.) மின்னியக்கவியல் : இயக்க நிலையிலுள்ள மின் விசை தொடர்பான ஆய்வு

electro jet : (விண்.) மின்னியக்கத் தாரை : ஒரு கோளத்தில் மேல் வாயு மண்டலத்திலுள்ள அயனியாக்கிய படுகையில் ஒட்டிக்