பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

251

கொண்டிருக்கும் மின்னோட்ட இயக்கம்

electro luminescence : (மின்.) மின்னியக்க ஒளிர்வு : ஒளி உண்டாக்குவதற்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஒருமுறை.இதில் ஒரு பரஸ்பர வெண்களிமண் படுகை, ஒளியை உண்டாக்குவதற்கு மின்விசை விளைவு கடத்தியாகச் செயற்படுகிறது. நேர்மின்னோட்ட அழுத்தத்தைக் கொடுக்கும்போது, எலெட்ரான்கள் விடுபட்டு, பரஸ்பர அணுக்களைத் தாக்கி ஒளி உண்டாக்குகின்றன

electrolytic capacitor : (மின்.) மின் பகுப்பான் கொண்மி : ஓர் அலுமினிய நேர் மின் தகட்டினை உடைய கொண்மி. இதில் ஒர் உலர்ந்த பசை அல்லது திரவம் எதிர் மின் தகடாக அமைகிறது. மின் விளைவு கடத்தியாக ஒரு மெல்லிய ஆக்சைடு படலம் அலுமினியம் தகட்டில் படிகிறது

electrometallurgy : (மின்.) மின் உலோகத் தொழில் : உலோகங்களைச் சுத்திகரிப்பதற்கும், பற்றவைப்பதற்கும், குளிர்வித்துப் பதனப்படுத்துவதற்கும், பகுப்பதற்கும், படியவைப்பதற்கும் பயன்படும் மின்னியல் செயல்முறை

electro meter : (மின்.) மின் மானி : மின்னேற்றத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி

electron : (மின்னி.) எலெக்ட்ரான் : மிகச்சிறிய மின்னியக்க அணுத்துகள். இது இயற்கையில் காணப்படும் சிறிதளவு எதிர்மின்னேற்றத்தைக் கொண்டிருக்கிறது

electron beam : (மின்னி.) எலெக்ட்ரான் கற்றை : புற நிலை மின்னியல் காந்தப் புலங்களின் மூலமாக ஒரு கற்றை வடிவில் ஒரு முகப்படுத்தப்படும் எலெக்ட்ரான்களின் தொகுதி. இதனை எதிர் மின் கதிர்க் கற்றை என்றும் அழைப்பர்

electron gun : (மின்.) எலெக்ட்ரான் பீற்று : தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்பு உருவங்களை நுண்ணாய்வு செய்வதற்கும், தொலைக்காட்சித் திரையில் அந்த உருவம் மறுபடியும் உண்டாவதற்கும் பயன்படும் எலெக்ட்ரான் கற்றை ஏற்படுகிறது

electronics : (மின்னி.) மின்னணுவியல் : மின்மங்கள் (எலெக்ட்ரான்கள்) போன்ற அணுத் துகள்களைப் பற்றிக் கூறும் இயற்பியல் பிரிவு. இது சுதந்திரமான் எலெக்ட்ரான்களையும் அவற்றை விடுவிக்கும் வழிமுறைகளையும். சுதந்திரமாக இருக்கும்போது அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆராய்கிறது. வானொலி, தொலைக்காட்சி, ஒளியியல் மின்கலங்கள் போன்ற சாதனங்களில் பயன்படும் எலெக்ட்ரான் தத்துவங்கள் பற்றிய ஆராய்ச்சியும் இதில் அடங்கும்

electron lens : எலெக்ட்ரான் ஆடி : ஒரு கண்ணாடி வில்லை ஒளிக்கற்றையை ஒரு முகப்படுத்தும் ஒரு காந்தப்புலம்

electron microscope : எலெக்ட்ரான் நுண்ணோக்காடி : சாதாரண நுண்ணோக்காடியில் பொருள்களைப் பார்க்கும்போது, ஒளியின் ஒரு பகுதியை அந்தப் பொருள்கள் பிரதிபலிப்பதால் அப்பொருள்களைப் பார்க்கிறோம். ஆனால், பார்க்கப்படும் பொருள் ஒளியின் அலை நீளத்தில் 1/5 பகுதிக்குக் குறை