பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வாக இருக்குமானால், ஒளி அதனைச்சுற்றிப்பாயும். அதனால் அப்பொருளைப் பார்க்க இயலாது.ஓர் எதிர் முனையிலிருந்துவரும் எலெக்ட்ரான் கற்றை, ஓர் ஒளிக்கற்றைபோல் செயற்படுகிறது. எலெக்ட்ரான் ஒளிக்கற்றையின் அலை நீளம் ஒளியைவிடப் பல்லாயிரம் மடங்கு குறைவாக இருப்பதால், 100-300-க்குக் குறைவில்லாத அணுக்களின் மூலக் கூறுகளைக் காட்டக் கூடியவை

electron tube : (மின்னி.) எலெக்ட்ரான் குழாய் : இது ஒர் எலெக்ட்ரான் சாதனம். இதனுள், உட்புகாத ஒரு கொள்கலத்தில் உள்ள ஒரு வெற்றிடத்தில் அல்லது வாயு ஊடகத்தின் வழியே எலெக்ட்ரான்கள் மூலமாக மின் கடத்தல் நடைபெறுகிறது

electron metal : (உலோ.) எலெக்ட்ரான் உலோகம் : இது ஒரு மக்னீசிய உலோகக் கலவை. இதில் 5% துத்தநாகமும், 5% செம்பும் கலந்திருக்கும். இது உந்துவண்டிகளின் உந்துதண்டு தயாரிக்கப் பயன்படுகிறது

electroplating : மின்முலாம் பூசுதல் : மின்பகுப்பு முறையின் மூலம் உலோக முலாமிடும் செய்முறை

electroscope : (மின்.) மின் காட்சி : ஒரு பொருளில் மின்னாற்றல் இருப்பதையும், அதன் இயல்பினையும் காட்டும் கருவி

electrophorous : (மின்.) அணுக்க நிலை மின்னாக்கி : அணுக்கத்தால் நிலை மின் ஆற்றலை உண்டு பண்ணும் பொறி அமைவு

electropism : (மின்.) தாவர மின்னியல் : தாவரங்களின் வளர்ச்சியும் மின்விசையும் தொடர்பான அறிவியல்

electrostatic corona : (மின்.) நிலைமின்னியல் ஒளிர்வு : ஒரு நிலை மின்விசை போதிய அளவு ஆற்றலுடன் உருவாகும்போது மின்முனைகளைச் சுற்றி உண்டாகும் மின்மயத்துகள்.

electrostatic discharge : (மின்.) நிலைமின்னியல் மின்னோட்டம் : நிலைமின்னியல் பொருட்களுக் கிடையிலான ஆற்றலின் வேறுபாட்டினால் உண்டாகும் சுடர்

electrostatic field : (மின்.) நிலைமின்னியல் புலம் : நிலைமின்னூட்டம் பெற்ற ஒரு பரப்பிடம்

electrostatistic focus : (மின்.) நிலைமின்னியல் குவிமையம் : சரிசம இல்லாத நிலைமின்னியல் புலங்களைக் கொண்ட நேர்முனை வழியாகப் பாயும் ஒர் எலெக்ட்ரான் கற்றையைக் குவி மையப்படுத்துதல்

electro-statics : (மின்.) நிலைமின்னியல் : நிலையான மின்விசை நிகழ்வுகளைப்பற்றி ஆராயும் மின் அறிவியல் பிரிவு.

electrotheraphv : (மின்.) மின்னியல் நோய்ச் சிகிச்சை : மின்னாற்றலைச் செலுத்தி நோய் தீர்க்கும் முறை

electro-type : (அச்சு.) மின்அச்சு : மின்னாற் பகுக்கும் முறையின் மூலம் அச்சுருவின் மீது செம்பு பூசிச் செய்யப்படும் அச்சுத் தகடு

electrum : (வேதி.) பொன் வெள்ளிக் கலவை : பொன்னும் வெள்ளியும் இயல்பாகக் கலந்த ஒர் உலோகக் கலவை. இதில் ஏறத்தாழ 40% வெள்ளி கலந்திருக்கும்

element : (வேதி.) தனிமம் : அறிவியல் அறிந்த வழிமுறைகளில் எதனாலும் பகுக்க முடியாத ஒரு பொருளின் அடிப்படைக் கூறு

elementary : தனிமஞ்சார்ந்த : ஒரு தனிமத்தை அல்லது தனிமங்களைச் சார்ந்த,