பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

elliptical arch : (க.க.) நீள் வட்டக் கவான் : மூன்று மையங்களை அளாவி அமைக்கப்படும் நீள்வட்ட வடிவ ஒரு வில் வளைவு

elliptical or eccentric gears: (பட்.) நீள் வட்ட அல்லது பிறழ்மையப் பல்லினை : இந்தப் பல்லிணையில் சுழல் தண்டு மையத்தில் இருக்காது. முட்டை வடிவம், இதய வடிவம் போன்ற எந்த வடிவிலும் இது அமைந்திருக்கும், அச்சு எந்திரங்கள் இந்த வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

elm : (மர.) எல்ம் மரம் : இரட்டை ரம்பப் பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துகளும் உள்ள மரம்

elongation : (எந்.பொறி) நீட்சி : தகடாகக்கூடிய இரும்பும், எஃகும் விறைப்பாக்க அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும்போது முறிகின்ற வரையில் நீட்சியடையும். இதனால் பரப்பளவு குறையும். நீட்சியளவும் பரப்பளவுக் குறையும் அதன் தரத்திற்குச் சோதனை யாகும். குழைமப் பொருட்களில், அழுத்தத்திற்குள்ளான பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு

em : (அச்சு.) 'எம்' அலகு : அச்சுவரி நீளத்திற்குரிய அலகுகளில் பெரும்படி அலகுக்கூறு

embellish : ஒப்பனை : ஒப்பனை செய்தல் அல்லது அழகுபடுத்துதல்.அலங்கார வேலைப்பாடுகள் செய்து நுணுக்க நயமுடையதாக்குதல்

emblazon : மரபுருவ ஒப்பனை : மரபுரிமைச் சின்ன உருவங்களால் ஒப்பனை செய்தல்

emblem : இலச்சினை : மரபுச் சின்னமாகப் பயன்படும் சிறப்பு அடையாளக் குறி

embossed : (பட்.) புடைப்புச் சித்திர வேலைப்பாடு : மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி புடைப் புருப்படச் செதுக்கிச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு

embossing : புடைப்புச் சித்திரக்கலை : புடைப்பு உருப்படக் செதுக்கிச் செய்யப்படும் சித்திரக்கலை

embossing hammer : புடைப்புச் சித்திரச் சுத்தி : உட்புழைவான பொருள்களின் உட்பரப்பில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் சுத்தி

embossing plate : (அச்சு.) புடைப்புச் சித்திரத் தகடு : ஒரு தகட்டின் பரப்புக்குக் கீழே செதுக்கப் பட்டுள்ள பகுதிக்குள் காகிதத்தை நுழைத்து அச்சுப் பக்கத்தின் உருவத்தை புடைப்பாக்கம் செய்யலாம்

emergency brake : (தானி.) அவசரத் தடுப்புக் கருவி : உந்து வண்டியில் கையினால் இயக்கப்படும் தடுப்புக் கருவி. இதனைப் பொதுவாக நிறுத்தும் தடுப்புக் கருவி என்பர். இதனை உந்து வண்டி ஏற்றத்தில் ஏறும்போது மட்டுமே மிக அரிதாகப் பயன்படுத்துவர். நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் உந்து வண்டி நகராமல் தடுப்பதே இதன் பணி

emergency floatation gear : (வானூ.) அவசர மிதவைப் பல்லிணை : விமானம் அவசரமாக நீரில் இறங்க வேண்டியிருக்கும் நேர்வில் மிதப்பாற்றல் அளிப்பதற்காகத் தரைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்

emergency switch : (மின்.) அவசர இணைப்பு விசை : ஓர் அவசர நிலையின்போது அல்லது தீ விபத்தின்போது ஒரு கட்டிடத்