பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

பஞ்சு அல்லது பட்டுத்துணியால் பொதியப்பட்டிருக்கும்

enargite : (உலோ.) எனார்கிட் : Cu3 AsS4. இது ஒரு செம்புத்தாது. (செம்பு ஆர்சனிக் சல்பைடு)

encircle : வளை(தல்) : வட்டவடிவமாகச் சூழ்ந்து கொள்ளுதல்; வட்டவடிவமாகக் கோடு வரைதல்

enclosed arc lamp : (மின்.) அடைப்புச் சுடர்விளக்கு : ஒரு சுடர்விளக்கில், சுடரினை ஒரு கோள வடிவம் அடைத்துக் கொண்டிருக்குமாறு அமைத்தல். இதனால் சிறிதளவு காற்று மட்டுமே உட்புக முடியும். அதனால் கார்பன் செலவழிவு குறையும்

enclosed fuse : (மின்.) அடைப்பு உருகி : காற்றுப் புகாத காப்புறை அண்டையிடத்து வைக்கப்பட்டுள்ள ஓர் உருகி இது. வாயு அல்லது தூசு தீப்பற்றி விடாமல் தடுக்கிறது

endive scroll : சுருள் இலைவடிவு : சுருள் இலைபோல் செதுக்கப்பட்ட வடிவமைப்பு

end-lap joint : முனை கவிகணைப்பு : இணைக்கப்படும் இரு துண்டுகளையும் அவற்றின் அகலங்களின் அளவுக்கு இரு பகுதிகளாகப் பகுத்து அமைக்கப்படும் முனை இணைப்பு

முனை கவி இணைப்பு

endless saw : முனையிலா ரம்பம் : சுற்றுவரிப்பட்டையிட்ட ஈர்வாள்

end mill : (எந்.) முனை வெட்டு எந்திரம் : கதிர்களுடன் அல்லது பொருத்து குழியுடன் நேரடியாகப் பொருத்துவதற்கான, கூம்பு வடிவத் தண்டு கொண்ட வெட்டு எந்திரம்

endogen : (தாவ.) தண்டக வளர்ச்சித் தாவரம் : தண்டில் அகவளர்ச்சியுடைய தாவர வகை

end paper : இறுதிக் காகிதம் : கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறமும் பின்புறமும் வைத்துத் தைக்கப்படும் காகிதம்

end play : (மின்.) இறுதி முனை இயக்கம் : ஒரு சுழலும் உறுப்பின் இறுதி முனைகளிலுள்ள இயக்கம்: அதாவது, நீளப்பாங்கான திசையிலுள்ள இயக்கம்

end thrust : (பொறி.) முனை உதைப்பு : செங்குத்தான அல்லது கிடைமட்டமான ஒரு சுழலும் தண்டினால் ஏற்படும் முனை இயக்க அல்லது நீளப்பாங்கான அழுத்தம். இது பெரும்பாலும் ஒர் உதைப்புத் தாங்கியினால் உண்டாகும்

endurance : (வானூ.) இசைதகைவு : ஒரு விமானம், வானத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில், குறிப்பிட்ட வேகத்தில் நிலைத்து நிற்கக்கூடிய உயர்ந்த அளவு நேரம்

endurance limit : (உலோ.) இசைதகைவு வரம்பு : ஒரு பொருள் நலிவுறாமல் எவ்வளவு அதிக அளவுத் தகைவுக்கு உட்படுத்தப்படலாமோ அந்த அளவு

energy : (இயற்.) விசையாற்றல் : ஒரு பொருள் தடையினைச் சமாளித்து செயலுறுவதற்குத் திறனுடையதாக இருக்குமாயின், அது விசையாற்றல் உடையதெனக் கூறப்படும். இந்த (1) விசையாற்றல் (2) உள்நிலையாற்றல் என இருவகைப்படும்