பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

espognolette : பலகணித் தாழ்ப்பாள் : ஃபிரெஞ்சு நாட்டு அலங்காரப் பலகணித் தாழ்ப்பாள்

ester : (வேதி.) ஈஸ்டர் : ஒரு கரியக உப்பு மூலப் பொருளும் அமிலமும் வினைபுரிவதால் கிடைக்கும் ஒரு கலவை. (உ-ம்) (CH3C7H5O3) = மெத்தில் சாலிசைக்ளேட்

ester gum : (வேதி.) ஈஸ்டர் கோந்து : படிக வண்ண மெருகு தயாரிக்கப்படும் பொருள். பிசின், கிளிசரின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது

estimating : (க.க.) மதிப்பீடு செய்தல் : ஒரு வேலைப்பாட்டுக்குத் தேவைப்படும் பொருளின் அளவு, உழைப்பின் அளவு, முடிவுற்ற பொருளின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுதல்

etching : செதுக்கு வேலைப்பாடு : மெழுகு பூசிய தகட்டுப் பரப்பில் ஊசியினால் செதுக்கு வேலை செய்து, செதுக்கப்பட்ட பகுதிகளை அமிலத்தில் வினைபுரியச் செய்து உருவம் அமைத்தல்

ethane : (வேதி.) ஈத்தேன் : வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6)

ethanol : (வேதி.) எத்தனால் : எத்தில் ஆல்ககால் (C2H5OH)

ether : (வேதி.) ஈதர் : (C2H5)2O மயக்க மருந்தாகப் பயன்படுகிற, எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்ம வகை. கந்தக அமிலத்துடன் ஆல்ககால் கலந்து தயாரிக்கப்படுகிறது

ethyl : (வேதி.) எத்தில் : C2H5, வெறியம் (ஆல்ககால்) முதலியவற்றிலடங்கிய அடிப்படை நீர்க்கரியகப் பொருள். ஈத்தேனிலிருந்து ஒரு ஹைட்ரஜன் அணுவை விலக்கி விடுவதன் மூலம் இது கிடைக்கிறது

ethyl cellulose : (வேதி. குழை.) எத்தில் செல்லுலோஸ் : மரக்கூழ் அல்லது பருத்திக் கந்தல்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வலுவான வெப்பந்தாங்கக் கூடியது; எளிதில் தீப்பிடிக்காதது. இது வார்ப்படங்கள் தயாரிக்கவும், காப்புப் பூச்சுகளுக்கும், மின்காப்புக்கும் பயன்படுகிறது

ethylene : (வேதி.) எத்திலீன் : நிறமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பூரிதமாகாத, வாயு வடிவக் கூட்டுப் பொருள் (C2H4). இது ஒளிரும் வாயுக்களில் அடங்கியுள்ளது

eucolloids : (வேதி. குழை.) ஈக்கோலாய்டுகள் : ஆயிரத்திற்கு மேற்பட்ட மீச்சேர்மங்கள். அதாவது இதில், ஒவ்வொரு மூலக்கூறும், தனிப்பொருளின் 1000 அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் கரைசல்கள் மிகுந்த பசைத் தன்மையுடனிருக்கும். திட நிலையில் இவை மிகவும் கடினமானவை

eutectic : (இயற்;உலோ,வேதி.) கூறு நிலையமைவுடைய : கலவைகளில் ஒரே வெப்ப நிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய

eutectic alloys : (உலோ.)கூறு நிலையமைதி உலோகக் கலவைகள்: அலுமினியம், சிலிக்கன், காட்மியம், பிஸ்மத் போன்ற உலோகக் கலவைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒன்றில் மற்றொன்று முற்றிலுமாகக் கரைந்து விடக் கூடிய இரு உலோகங்களின் கலவை

evaporate : (வேதி.) ஆவியாக்கு :