பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
261

ஈர நயப்பு நீக்கி ஆவியாக மாற்றுதல்

evaporation : ஆவியாக்குதல் : ஈர நயப்பு நீக்கி ஆவியாக்குதல்; வேதியியற் பொருட்களை உலர்த்திச் செறிமங்களாக்குதல்; திரவத்தை ஆவியாக மாற்றுதல்

evolution : (உயி.) உயிர்மலர்ச்சி/ பரிணாமம் : உயிரினங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகை வளமும் வகை வளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்னும் உயிரியல் கோட்பாடு

excavation : (க.க.) அகழ்வு : பொறியியல் பணிகளுக்காக நிலத்தை அகழ்தல் அகழ்வு செய்த பள்ளம்

excelsior : உட்திணிவு மரச்சீவல் : உட்திணித்து இடம் நிரப்பப் பயன்படுத்தப்படும் மரச்சீவல்

exchange : பரிமாற்றம் : பணத்திற்காக பணிபுரிதல் அல்லது சரக்குகளை விற்பனை செய்தல்; சரக்குகளுக்குப் பணம் கொடுத்தல்; வாணிகத்தில் பண்டங்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல்; நாணயப் பரிமாற்றம்

excitation of field : (மின்.) புலக்கிளர்ச்சி : ஓர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் புலங்களிலுள்ள கம்பிச் சுருள்களின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி காந்த இயக்கம் உண்டு பண்ணுதல்

excited molecule : (இயற்.) கிளர்வுறு மூலக்கூறு : ஒரு மின்னியல் வெளியேற்றத்திலிருந்து ஆற்றலை ஈர்த்துக் கொள்ளும் ஒரு மூலக்கூறு. அவ்வாறு ஈர்த்துக் கொள்ளும் மின் ஆற்றலை அந்த மூலக்கூறு ஒளியாக வெளியிடுகிறது

exciter : (மின்.) கிளர்ப்பி : மாறு மின்னாக்கிப் புலத்திற்கு மின் விசையளிப்பதற்குப் பயன்படும் ஒரு சிறிய நேர்மின்னாக்கி

exciter current : (மின்.) கிளர்ப்பி மின்னோட்டம் : ஒரு பெரிய மாறு மின்னாக்கிக்கு அல்லது மின்னாக்கிக்குப் புல மின்னோட்டமளிப்பதற்குப் பயன்படும் ஒரு சிறிய மாறு மின்னாக்கி உற்பத்தி செய்யும்மின்னோட்டம்

exciiter generator : (uğlair.) கிளர்ப்பி மின்னாக்கி : ஒரு மாறு மின்னாக்கிக்குப் புலமின்னோட்டமளிப்பதற்குப் பயன்படும் ஒரு நேர் மின்னாக்கி

exhaust : (எந்.) புறம் போக்கி : ஓர் எஞ்சினின் நீள் உருளையிலிருந்து பயன்படுத்தப்பட்ட நீராவியை வெளியேற்றுவதற்கான எந்திரப் பொறியமைவு

exhaust collector ring : (வானூ.) உள் வெப்பாலை வெளியேற்றமைவு : எஞ்சினின் நீள் உருளைகளிலிருந்து வெளியேறும் வாயுக்களைப் புறம்போக்குவதற்கான வட்ட வடிவச் செல்வழி

exhaust fan : (மின்.) புறஞ் செல்காற்றோட்ட விசிறி : தூசு, புகை முதலியவற்றை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான சுழல் விசிறி

exhaust manifold : (தானி.) வெளியேற்றுப் பல்புழை : பல்வேறு நீள் உருளைகளிலிருந்து வெளியேற்றுக் குழாய்க்கு வாயுக்களைக் கொண்டு செல்வதற்கான பல்புழைவாய்

exhaust pipe : (தானி.) வெளியேற்றுக் குழாய் : நீள் உருளைகளிலிருந்து வெளியேறும் நீராவியை அல்லது வாயுக்களை வெளியே கொண்டு செல்லும் குழாய்