பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

exhaust valve : வெளியேற்று ஓரதர் : எஞ்சினிலிருந்து வாயு அல்லது நீராவி வெளியேறுவதற்கு மட்டுமே அனுமதிக்கும் ஓரதர்

exlibris : (அச்சு.) முகப்புச் சீட்டு : புத்தக உடைமை உரிமையாளரின் பெயர், சின்னம் முதலிய விவரங்களடங்கிய முகப்புப் பொறிப்புச் சீட்டு

exophthalmic goitre : (நோயி.) கழுத்துக் கழலை : தைராய்டுச் சுரப்பிகளில் உண்டாகும் ஒரு வகை நோய்.இது கண்களைப் புறந்தள்ளி, கழுத்தைவீங்கச் செய்கிறது

கழுத்துக் கழலை

exosphere : (விண்.) புறக்கோடிவாயு மண்டலம் : வாயு மண்டலத்தின் புறக்கோடி விளிம்பு அல்லது படுகை

exotic fuel : (விண்.) அயற்பண்பு எரிபொருள் : விமானங்களுக்கும், ராக்கெட்டுகளுக்கும் பயன்படும் பல்வேறு வாயுக்கள் கலந்த எரிபொருள்

expanded metal : (உலோ.) விரிவாக்கிய உலோகம் : வெட்டிக்காரைக் கட்டுமான உள்ளீடாகப் பயன்படும், பின்னால் சட்டமாக விரிவாக்கப்படுகிற உலோகத்தகடு

expanding mandrel : (எந்.) விரிவாக்கிய நடுவச்சு : விரிவாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்த கடைசல் பிடிக்கும் பொறியின் நடுவச்சு

expanding universe : (விண்.) அகல் விரிவு அண்டம் : நாம் கண்ணால் காணும் சூரியனும், விண் மீன்களும் ஒருவகைப்பால் வீதிமண்டலத்தின் ஒரு பகுதி. இது தவிர, வேறு வகைப்பால் வீதிமண்டலங்களும் உள்ளன. இவற்றின் ஒளி, ஓர் ஊடகத்தின் ஒளிச் சிதறலால் உண்டாகும் நிறமாலையில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட சிவப்பு நிறமுடையவை. இதனாலேயே, இவை நம்மிடமிருந்து தூர விலகிச் செல்வது போல் தோன்றி, அண்டம் அகன்று விரிந்து செல்வதாகத் தோன்றுகிறது

expansion : (இயற்.) விரிவாக்கம் : பரவுதல்; விரிவடைதல்; வடிவளவில் பெருக்கமடைதல்

expansion bit : (மர.வே.) விரிவாக்க வெட்டிரும்பு : ஒரு துளையிடும் வெட்டிரும்பு. இதில் வெட்டுக்கத்திகள் ஆரைபோல் அமைக்கப்பட்டிருக்கும். இதனால், ஒரே கருவியினால், பல்வேறு விட்டங்களுடைய துளைகளைச் செய்யலாம்

expansion bolt : விரிவாக்க மரையாணிகள் :ஆப்பு போல் செயற்படும் பிரிப்புப் பெட்டியுள்ள மரையாணி. இது செங்கலுடன் அல்லது கான்கிரீட்டுடன் இணைக்கப் பயன்படும்

விரிவாக்க மரையாணிகள்

expansion fit : (மர.வே.) விரிவாக்க இணைப்பு : உலோக உறுப்புகளை ஒன்றோடொன்று இறுகப் பொருத்தி இணைத்தல். உட்பகுதி பனிக்கட்டி மூலம் சுருக்கவோ உறைவிக்கவோ செய்யப்பட்டு, சுருங்கும் இணைப்புக்கு எதிரான நிலையில் பொருத்தப்படுகிறது

expansion joint : (பொறி.) விரிவாக்க மூட்டு : குழாய்களில் விரிவாக்கத்தாலும் சுருக்கத்தாலும் ஏற்படும் இயக்கத்தைச் சமாளிப்பதற்குரிய சாதனம். ஒரு நீராவி மற்றும் வென்னீர் சூடாக்கும்