பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தின் உருளையிலுள்ள கதிருடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு வட்ட வடிவத் தகடு. வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை இதனுடன் இணைத்துக் கொள்ளலாம்

facet : பட்டை தீட்டிய முகப்பு : நவமணிகளில் பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு

facilitate : எளிதாக்கு : எளிதாக அல்லது முழுமையாக இயங்குவதற்கு உதவிபுரிதல்

facing : (வார்.) முகப்பமைத்தல் : வார்ப்படத்திலிருந்து ஒரு தோரணியை அகற்றிய பின்பு காரீயம், அப்பிரகம் போன்ற முகப்புப் பொருளைக் கொண்டு சிறிய வழுவழுப்பான வார்ப்பு வேலைகளைச் செய்தல்

facsimile : உருவ நேர்ப்படி : எழுத்து மட்டுமின்றி வடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் காட்டும் நேர் படி உருப்பகர்ப்பு

facsimile transmission : (மின்.) உருவ நேர்ப்படி அனுப்பீடு : தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி படத்தின் நிழல்ஒளிக்கூறுகளைத் தனித்தனியே பகுத்து, திரையில் தோன்றும் வகையில் நிழல் கூறுகளை மின்னியல் தூண்டுதல்களாக மாற்றுதல்

factor of safety : காப்புக் கரணி : உறுதிப்பாட்டுக்கும் உயர்வெல்லைப் பாரத்துக்கும் இடையேயுள்ள வீத அளவு

fade in : உருத்தோற்றம் : தொலைக் காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்களை படிப்படியாக உருவாகுமாறு செய்தல்

fade out : உருவ மறைவு : தொலைக்காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்கள் படிப்படியாக தேய்ந்து மறையுமாறு செய்தல்

fading : (மின்.) குன்றல் : வானொலியில், வாயுமண்டலச் சூழ்நிலைகளினால் சைகை வலிமை தற்காலிகமாக மாற்றமடைதல்

fagot : எஃகுக் கம்பிக்கற்றை : சூடாக்கி, கத்தியால் அடித்து, வேறொரு சலாகையாக மாற்று வதற்காக ஒன்று சேர்த்துக் கூட்டப்படும் எஃகுக் கம்பிகளின் கற்றை

fahlum metal : (உலோ.) ஃபாஹ்லம் உலோகம் : மலிவான அணிகலன்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு வெண்ணிற உலோகக் கலவை. இதில் 40% வெள்ளியமும், 60% ஈயமும் கலந்திருக்கும்

fahrenheit :ஃபாரன்ஹீட் : ஜெர்மன் இயற்பியலறிஞர் கேப்ரிய்ல் ஃபாரன்ஹீட், உறை நிலை 32° ஆகவும், கொதிநிலை 212 ஆகவும் கொண்ட வெப்பமானி இவருடைய பெயரில் அழைக்கப்படுகிறது

faience : ஒப்பனை மண்பாண்டம் : சித்திர வேலைப்பாடுகளுடன் ஒப்பனை செய்யப்பட்ட பீங்கான் மண்பாண்டங்கள்

failure : தளர்வு : பொருட்களும், கட்டமைவுகளும் எந்தப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டனவோ அந்தப் பணிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்வுறுதல்

fairing : (வானூ.) நேரொழுங்கமைப்பு : விமானத்திற்குரிய மேற்பரப்பில் நேரொழுங்கமைதிப்படுத்த இணைக்கப்பட்டுள்ள பளுவற்ற மழமழப்பான புறக்கட்டமைப்புப்பகுதி

fald stool : சாய்வு மேசை : முழங்காற் படியிடுவதற்குரிய அசைவியக்கமுள்ள சாய்வு மேசை.மடிக்கக்கூடிய கையில்லா நாற்காலியையும் குறிக்கும்