பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வெளிப்பாட்டு அடிக்குமிடையில் திரவம் பாய்வதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு மெல்லணையாக இதில் காற்று செயற்படுகிறது

air clamp: (எந்.) காற்றுப் பிடிப்பான்: காற்றழுத்தத்தின் வாயிலாக இயக்கப்படும் பற்றுக் கருவி

air cleaner: (தானி; எந்.) காற்றுத் தூய்மையாக்கி: தூசு மற்றும் பிற அயற்பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுவதற்கு முன்பு அவற்றைத் தனியே பிரித்தெடுக்கும் ஒரு சாதனம்

air compressor: (தானி.) காற்றழுத்தி: டயர்களில் காற்றடைப் பதற்கும், பல்வேறு தொழில் துறைப்பயன்பாடுகளுக்கும் அழுத்திய காற்றினை வழங்கும் பொறி

air condenser: (மின்.) காற்று மின்விசையேற்றி: வட்டத் தகடுகளிடையிலான காற்று இடைவெளிகளிலுள்ள ஒரு வகை மின்விசையேற்றி. மின்னேற்றங்களிடையே ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மின் பாயாமல் காப்பிடுவதற்கு இது பயன்படுகிறது

air conditioning: காற்றுப் பதனாக்கம்: காற்றுத் தூய்மையாக்கம், ஈரநயப்பு நீக்குதல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் முறைகளைக் குறிப்பது

air control: (வானூ) காற்றுக் கட்டுப்பாடு: வானூர்தியின் கட்டுப்பாட்டு பரப்புகளை இயக்குவதற்குப் பயன்படும் சாதனம்

aircooled engine: (தானி; எந்.) காற்றில் ஆறிய பொறி: எந்திரத்தின் முன்புள்ள ஓர் ஊர்தியானது, நீள் உருளைகளுக்கு மேலாக, அடைப்புள்ள இடைவெளிக்குள் காற்றினை உட்செலுத்துகிறது. அதிலிருந்து அந்தக் காற்று, நீள் உருளைகளையும், மற்ற உறுப்புகளையும் கடந்து அடியிற்செலுத்தப்படுகிறது. நீள் உருளைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும். மிகப் பெரும்பாலும் கதிர் வீச்சுப் பரப்பினை ஏற்படுத்தும் வகையில் பரிதியைச் சுற்றி செதிலமைப்புத் தொடர்களுடன் அமைக்கப்பட்டிருக்கும்

air-cooled transformer:(மின்.) காற்றில் ஆறிய மின்மாற்றி: இந்த வகை மின்மாற்றியில், சுருள்களின் சூடாக்கமானது, ஒரு காற்றோட்டச் சுழற்சியை ஏற்படுத்துகிறது

air-core inductor: (மின்.) காற்று மைய மின்னோட்டத் தூண்டு கருவி: ஓர் உலோக மையமாக இல்லாத ஒரு மின்காப்பு அமைவில் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்னோட்டத் தூண்டுகருவி; ஒரு மையத்தைக் கொண்டிராமல் தன் ஆதாரத்தைக் கொண்ட ஒரு தூண்டுச் சுருள்

air-core solenoid: (மின்.) காற்று உள்ளீட்டுக் கம்பிச்சுருள்: திட உள்ளீடு இல்லாமல், உட்புழையைக் கொண்டுள்ள ஒரு கம்பிச்சுருள்

aircraft: (வானூ.) வானூர்தி/விமானம்: காற்றில் எழும் திறன் அல்லது இயக்கவினை காரணமாக, காற்றின் ஆதாரத்துடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சுமையேற்றிச் செல்லும் சாதனம்

aircraft carrier: (வானூ.) வானூர்தி தாங்கிக் கப்பல் விமானம் தாங்கிக் கப்பல்: வானூர்திகளை ஏற்றிச் செல்லவும், வானூர்திகள் வந்திறங்கவும், புறப்பட்டுச்செல்லவும் ஏற்றவகையில் மேல்தளம்வடி வமைக்கப்பட்ட ஒரு கப்பல் (விமானதளக் கப்பல்)

air cushion: காற்று மெத்தை: அதிர்ச்சி தாங்கியாக அல்லது இயக்கத்தை முறைப்படுத்தும் அல்லது