பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

லேய விஞ்ஞானி; மின்மாற்றிகளைக் கண்டுபிடிப்பதில் முதல் ஆராய்ச்சிகள் செய்தவர்

faraday's laws of electrolysis : ஃபாரடேயின் மின்பகுப்பாய்வு விதிகள் : (1) மின்பகுப்பாய்வுப் பொருட்களின் எடையானது,மின் பகுப்பரன் வழியாகச் செலுத்தப்படும் மின்விசையின் அளவின் வீத அளவில் இருக்கும் (2) ஒரு குறிப்பிட்ட அளவு மின் விசையைப் பொறுத்தவரையில், மின்பகுப்பாய்வுப் பொருட்களின் எடையானது, அப்பொருட்களின் மின்-எந்திரவியல் நிகர் எண்களின் வீத அளவில் இருக்கும்

farmers’ drill : (உலோ;வே.) உழவர் துரப்பணம் : நேர்மட்டமான, புல்லாங்குழல் வடிவான திருகு துரப்பணம். இது மென்மையான உலோகங்களில் பயன்படுத்த உதவுகிறது

fasces : சலாகைக்காட்டுச் சின்னம் : கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச் சின்னம். இது பண்டைய ரோமாபுரியில் உயர் நடுவரின் அதிகாரச் சின்னம்

fascia : (க.க.) மதிற்சிற்பம் :மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பத் தொகுதி

fascicle : தொகுதி : தனியாக வெளியிடப்படும், ஒரு நூலின் பல பகுதிகளில் ஒன்று

fast charger : (தானி.) விரைவு மின்னேற்றம் : உந்து வண்டியில் சேம மின்கலத்தில் அரைமணி நேரத்திற்குள்ளாக விரைவாக மின்னேற்றுவதற்கான ஒரு மின்சாதனம்

fast pulley : விரைவுக் கப்பி : சுழல் தண்டுடன் ஒரு சாய்வுத் திருகு மூலம் இணைக்கப்படும் ஒருகம்பி, இது இயக்கத்தை அனுப்பீடு செய்ய உதவுகிறது

fastening :(எந்.) கட்டிறுக்குதல் : மரையாணிகள், திருகாணிகள் போன்ற இறுகப்பற்றி இறுக்கக் கூடிய சாதனங்கள்

fat : (1) பசைக்களிமண் : பசைமிக்க களிமண் வகை (2) கொழுப்புப் பசை : கொழுப்பு நிறைந்த வேதியியற் பொருள். இது பெரும்பாலும் ஒலயிக், ஸ்டிபரிக், பால்மிட்டிக் போன்ற அமிலத் தன்மை வாய்ந்தது (3) திண்அச்சுரு : திண்ணியதான அச்சுரு. படங்கள் வெற்றுக்கோடுகள், இடைவெளியிடங்கள் உடையது

fathon : கடல் ஆழ அளவு : கடலின் ஆழத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் அலகு. இந்த அலகு ஆறு அடி அளவு அல்லது 1.828 மீட்டர் அளவுடையது

fatigue of material : பொருளயர்ச்சி : பொருள்களை அடிக்கடிப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளில் ஏற்படும் நலிவு. இவ்வாறு நலிவுறுவதால் அப்பொருள் முன்பு பாதுகாப்பாகத் தாங்கிய பளுவினை ஏற்றும் போது முறிந்து போகும்

fat spark : (தானி.) தடித்த அனற்பொறி : குள்ளமாகவும் தடிமனாகவும் உள்ள மூட்ட அனற்பொறி

faucet : (கம்.) திறப்படைப்புக் குழாய் : திரவங்கள் பாய்வதைக் கட்டுப்படுத்துவதற்குரிய திறப்பும் அடைபட|ம உடைய குழாய்

faun : (க.க.) ஆடு-மனித உருவம் : பாதி ஆட்டின் உடலும், பாதி மனித உடலும் கொண்ட பண்டைய ரோமாபுரிச் சிறு தெய்வத்தின் உருவம். இது அலங்கார வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது

fauteuil : கைநாற்காலி : 18ஆம் நூற்றாண்டு பாணியில் அமைந்த