பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
269

நாடக அரங்குகளில் பயன்படுத்தப்படும் நாற்காலி

favus : (க.க.) சித்திர வேலை : தேன்கூடு போன்று செய்யப்படும் வண்ணப் பின்னல் சித்திர வேலைப்பாடு

feather : (வானூ.) சுழல் இறகு : விமானத்தில் சுழலும் வகையில் அமைந்த இறகு அமைப்பு.விமானத்தில் இறக்கை முனையிலிருந்து இறக்கை முனையளவான இடையகலச் சுருணையைச் சுற்றி இறகு அலகினை ஊசலாடச் செய்வதன் மூலம் அந்த அலகின் வீழ் தகவினைக் குறைக்கவும் கூட்டவும் செய்ய இது உதவுகிறது

feather or sunk key: (எந்.) வரி இருசாணி : எந்திரச் சுழல் தண்டின் ஓர் அங்கமாக அமைந்திருக்குமாறு அச்சுழல் தண்டின் உட்புழையில் ஒரு பகுதி புதைந்துள்ள ஓர் இணையான இரு சாணி. சுழல் தண்டின்மீது இந்த இருசாணி நீளவாக்கில் செல்லும் வகையில் சுழல் தண்டில் வழி அமைக்கப்பட்டிருக்கும்

feather edge : ஆப்புமுனை : ஆப்பு வடிவில் அமைந்துள்ள கூர்முனை

feed : (அச்சு.) ஊட்டு : (1) அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்காக ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள் (2) எந்திரங்களுக்கு எரிபொருளுட்டுதல்

feed-back coil : பின்னூட்டச்சுருள் : ஒரு வெற்றிடக் குழாயின் தகட்டு மின் சுற்றில் இணைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள். இது அந்த மின்சுற்றிலிருந்து அதே குழாயின் இணைப்பு மின்சுற்றுக்கு மின் விசையை மீண்டும் செலுத்துவதற்கு அல்லது பின்னூட்டம் செய்வதற்குப் பயன்படுகிறது

feed back :(தானி.) யின்னூட்டம் : ஓர் எந்திரத்தின் வெளிப்பாட்டி இருந்து அதன் உட்பாட்டிற்குத் திரும்பிவரும் அளவீடுகள் போன்ற தகவல்கள.

feed edge : (அச்சு.) ஊட்டுமுனை : அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தாளின் முன் பகுதி முனை

feeder : (மின்.) (1) ஊட்டுகருவி : கிளை மின்சுற்றுகளுக்கு மின்விசையைக் கொண்டு செல்லும் கருவி. 2) ஊட்டுவோர் : அச்சு எந்திரத்தினுள் தாள்களைச் சீராகச் செலுத்துபவர் (3) ஊட்டி : அச்சு எந்திரத்தினுள் தாளினை ஒரே சீராகச் செலுத்தும் சாதனம்

feed gears : (எந்.) ஊட்டுப் பல்லிணை : ஊட்டுச் சலாகையினை இயக்கி, ஊட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பல்லிணைகள்

feed guides : (அச்சு.), ஊட்டு நிலைப்படுத்தி : அச்சு எந்திரத்தினுள் செலுத்தப்படும் தாளினை அச்சிடுவதற்கேற்ற நிலைக்குக் கொண்டுவரும் சாதனங்கள்

feeding :(அச்சு.) ஊட்டுதல் : அச்சு எந்திரத்தினுள் தாள்களை ஒழுங்கு நிலையுடன் செலுத்தல்

feed mechanism : (எந்.)ஊட்டுப் பொறியமைவு : எந்திரத்திற்குள் தேவையான பொருட்களைச் செலுத்துவதற்குப் பயன்படும் பொறியமைவு

feed pipe : (கம்.) ஊட்டக் குழாய் : பிரதானக் குழாயிலிருந்து பயன்படுத்தப்படும் இடத்திற்குப் பொருட்களை நேரடியாகக் கொண்டு செல்லும் குழாய்

feed screw : ஊட்டுத் திருகு : ஓர் எந்திரத்தின் வெட்டுக் கருவிக்கு