பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
271

fermentation : (வேதி.) நொதித்தல் : உயிரிகள் அல்லது வேதியியல் காரணிகள் மூலமாக ஒரு கரிமக் கூட்டுப் பொருளை வேதியியல் முறைப்படி சிதைவுறச் செய்தல்

fermi, enrico : (மின்.) ஃபெர்மி, என்ரிக்கோ (1901-1954) : இத்தாலிய அமெரிக்க விஞ்ஞானி; 1942இல் முதலாவது அணுவியல் தொடர் விளைவினை உண்டாக்குவதில் முக்கிய பங்கு கொண்டவர்; 1938இல் நோபல் பரிசு பெற்றவர்

feron : (வேதி.) ஃபெரோன் : (F12) குளிரால் உறை பதனம் ஊட்டும் பொருளாகப் பயன்படும் டைக்ளோடைஃபுளுரோமீத்தேன்

ferric oxide : (மின்.) அயஆக்சைடு : ஒலிப்பதிவு நாடாக்களில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் காந்தத் தன்மையுடைய அய ஆக்சைடு

ferrite : (மின்.) ஃபெர்ரைட் : இரும்பு மற்றும் நிக்கல், துத்த நாகம், மாங்கனிஸ் போன்ற பிற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தத் தன்மை வாய்ந்த பொருள். கம்பிச் சுருள்களுக்கான ஃபெர்ரைட் உட்புரி தயாரிக்கப்பயன்படுகிறது

ferrite core : (மின்.) ஃபெர்ரைட் உட்புரி : ஃபெர்ரைட்லிருந்து தயாரிக்கப்படும் காந்த உட்புரி

ferrochromium : (உலோ.) அயக்குரோமியம் : இது குரோமியமும் இரும்பும் கலந்த உலோகக்கலவை. எஃகுகளைத் தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதில் 5% கார்பன் கலந்திருக்கிறது. இது கருவிகளும், உந்து வண்டிகளுக்கான எஃகும் தயாரிக்கப் பயன்படுகிறது

ferromanganese : (உலோ.) அயமாங்கனீஸ் : 20% முதல் 80% வரையிலான மாங்கனீசும், 5% முதல் 7% வரையிலான கார்பனும் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை. இது ஆக்சிகரணத்தை நீக்கும் கார்ன்ரியாக்ச் செயற்பட்டு, மிகையான கந்தகத்தின் பாதிப்பை நீக்குகிறது

ferro-magnetic : (மின்.) நேர்காந்தத் திறம் : ஒன்றுக்குமேல் கணிசமான அளவு ஊடுருவும் திறன் பெற்ற ஒரு பொருளின் பண்பு. கோபால்ட், இரும்பு, நிக்கல், எஃகு போன்ற் உலோகங்களும், இவற்றின் உலோகக் கலவைகளும் இந்தப் பண்பு உடையவை

ferro-nickel : (உலோ.) அயநிக்கல் : இது நிக்கலும் எஃகும் கலந்த உலோகக் கலவை. இது தடை மாற்றிகளும், மின் கம்பிச் சுருள்களும் தயாரிக்கப் பயன்படுகிறது

ferro-phosphorous : (உலோ.) அயஃபாஸ்வரம் : அதிக அளவு ஃபாஸ்வரம் கலந்துள்ள ஒருவகை இரும்பு. தகரத் தகடுகளுக்கான எஃகு தயாரிக்கப்படுகிறது

ferro-silicon : (உலோ.) அயசிலிக்கன் : கடினமான எஃகு. இதில் 97.6% இரும்பும், 2% சிலிக்கனும், 0.4% கார்பனும் அடங்கியிருக்கும்

ferro-typing : (ஒளி.) அயஒளிப்பட முறை : மெல்லிய இரும்புத் தகட்டின்மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால ஒளிப்படமுறை

ferrous : (வேதி.) அயக : இரும்புக் கூட்டுப் பொருட்கள் அடங்கிய பொருட்கள்

ferrule : (எந்.) உலோகப் பூண் : மரக்கருவிகளின் முளை உடைந்து விடாமல் காப்பதற்கெனப் பொருத்தப்படும் வளைய வடிவ உலோகப் பூண்

ஒரு குழாயின் உட்பகுதியைச்