பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
273

field density :(மின்.) புல அடர்த்தி : காந்தப் புலத்தின் அல்லது காந்தப் பெருக்கின் அடர்த்தி. இது ஒர் அல்குப்பரப்பிடத்திலுள்ள ஆற்றல் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப் படுகிறது. இந்த அடர்த்தி, புலத்தனிமத்தின் வலிமை, கம்பியிலுள்ள திருப்பங்களின் எண்ணிக்கை, துருவத்துண்டுகளின் வடிவளவு, பண்பியல்புகள் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும்

field distortion : (மின்.) புலத்திரிபு : ஒரு மின்னாக்கியில், மின் காந்த வடதுருவத்திற்கும் தென் துருவத்திற்குமிடையில் மின்னகச் சுருணைகளில் உண்டாகும் எதிர் மின்னியக்க விசையின் காரணமாக சாதாரணப் புலத்தில் ஏற்படும் திரிபு

field excitation : (மின்.) புலக்கிளர்ச்சி : ஒரு மின் காந்தத்தில் சுருணையின் வழியாக ஒர் இரும்புத்துண்டினைச் செலுத்தி மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் காந்த விளைவு

field frequency : புல அலை வெண் : காந்தப்புலத்தில் அடுக்கு நிகழ்வு வேகம், இப்போதுள்ள தொலைக்காட்சி அமைப்பு முறையில், இது வினாடிக்கு 6 புலங்கள் என்ற வேகத்தில் அமைந்திருக்கும்

field magnets : (மின்.) புலக் காந்தம் : ஒரு நேர்மின்னாக்கியில் காந்தப்புல விசையை உண்டாக்கப் பயன்படும் மின்காந்தம்

field resistance : (மின்.) புலத் தடை : புலச்சுருணைகளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் அளவினைக் கட்டுப்படுத்துவதற்காக புலச் சுருள்களுடன் வரிசையாக இணைக்கப்பட்டுள்ள தடை

field rheostat : (மின்.) புலத் தடை மாற்றி : ஒரு மின்னாக்கியின் உற்பத்தி அளவினைக் கட்டுப்படுத்துவதற்காக புலமின் சுற்றில் செருகப்பட்டுள்ள குறைந்த மின்னோட்டத் திறன் கொண்ட மாறுநிலை மிகைத் தடை

field strength : (மின்.) புல வலிமை : ஒரு குறிப்பிட்ட தொலைவிலும், திசையிலும் ஒரு மின்புலத்தின் வலிமையை அளவிடுதல். இது ஒரு மீட்டருக்கு இதனை ஒல்ட்ஸ் என்று கணக்கிடப்படும்

field voltage control : (தானி. மின்.) புலமின்னழுத்தக் கட்டுப்பாடு : மின்னாக்கியின் புலச்சுருணையில் செலுத்தப்படும் மின்னழுத்ததினைக் கட்டுப்படுத்தும் முறை. பொதுவாக, இது அதிர்வு மின்னழுத்தத்தாலும், தடையினாலும் செய்யப்படுகிறது. இதனால், மின்னாக்கியின் உற்பத்தியளவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்கலாம்

field winding : புலச் சுருணை : மின்காந்தப்புலம் ஏற்படுத்துவதற்காக இயக்கிகள், மின்னாக்கிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்தங்கள்

fifth wheel : ஐந்தாம் சக்கரம் : ஒரு வாகனில் அல்லது அது போன்ற ஊர்தியிலுள்ள கிடைமட்டத் தட்டையான்தாங்கி திருப்பங்களில் திரும்பும்போது உந்து வண்டியின் உடற்பகுதியின் நிலைக்கேற்ப அச்சின் நிலையைக் கொண்டு வருவதற்கு இது அனுமதிக்கிறது

filament : இழை : மெல்லிய கம்பி அல்லது இழை.பிளாஸ்டிக் தொழில், பிசினிலான அல்லது கண்ணாடியாலான ஓர் இழை

filament transformer : இழை மின்மாற்றி : வானொயில்,