பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

வானொலிக் குழாய்களின் இழைகளுக்கு அல்லது சூடேற்றிகளுக்குச் சீரான அளவு மின்னழுத்தத்தைச் செலுத்துவதற்கு மின்னழுத்த அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் மின்மாற்றி

filament voltage : (மின்.) இழை மின்னழுத்தம் : ஓர் எலெக்ட்ரான் குழலின் வெப்ப மூட்டிகளுக்கு அல்லது இழைகளுக்குத் தேவைப்படும் மின்னழுத்தம். இதன் மதிப்பளவு, முதல் எண் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6BE6 என்பதற்கு 6.3 ஓல்ட் இழை மின்னழுத்தம் தேவை

filament winding : (மின்.) இழைச் சுருளை : வெற்றிடக் குழல்களுக்குத் துல்லியமான இழை மின்னழுத்தங்களை வழங்குவதற்கு ஒரு மின் மாற்றியிலுள்ள சுருணை

file/அரம் : அராவுவதற்காகப் பல்வேறு வடிவளவுகளில் அமைந்த கடினமான எஃகுக் கருவி. இதனைக் கொண்டு மரத்தை அல்லது உலோகத்தை அரா மழமழப்பாக்கலாம்.அரத்தைக் கொண்டு அராவுதல் பளபளப்பாக்குதல், சமனப்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கும்

அரம்

file card : அராவு சிக்குவாரி : குறுகிய நுண்ணிய கம்பிகள் பொருத்தப்பட்ட ஒரு வகைத் தூரிகை. இது அரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுகிறது

file hard : (உலோ.) அராவ இயலாக் கடினம் : அராவ இயலாத அளவுக்குக் கடினமாகவுள்ள ஓர் உலோகம், "அராவ இயலாக் கடினத்தன்மை" வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

files, kinds of : (உலோ.) அரங்களின் வகை : அரங்கள், அவை பயன்படுத்தப்படும் நோக்கங்களுக்காகத் தனிவகையில் தயாரிக்கப்படுகின்றன; அவை அந்த நோக்கங்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சமன அரம், மழிப்பு அரம், இரண்டாம் வெட்டு அரம், மழமழப்பாக்கு அரம் என்று அழைக்கப்படுகின்றன

filigree : சரிகை சித்திரவேலை : தங்கத்திலும், வெள்ளியிலும் செய்யப்படும் நுட்பமான அலங்கார வேலைப்பாடு

filing : (உலோ.வே.) அராவு வேலைப்பாடு : அரத்தினைப் பயன்படுத்திப் பொருள்களை அகற்றுவதற்கோ, மெருகேற்றுவதற்கோ, பொருத்துவதற்கோ செய்யப்படும் வேலை

fill : (பொறி.) நிரப்பு வேலைப் பொருள் : பொறியியல் தாழ்வான பகுதியை தேவையான நிலைக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படும் பொருள்

filler : திண்பொருள் : (1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர்

(2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்தன்மையும், வலிமையும், விறைப்பும் அளிப்பதற்காகக் குழைமப் பொருளுடன் கலக்கப்படும் சீனக் களிமண், மரத்துள், கல்நார், முதலியவை

(3) மரவேலைப்பாட்டில் ஓவியம் தீட்டுவதற்கு அல்லது வண்ண மடிப்பதற்கு முன்பு அதிலுள்ள பள்ளங்களையும் துவாரங்களையும் அடைப்பதற்குப் பயன்படும் கலவைப் பொருள்