பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
275

filers : (பொறி.) அடைப்புப் பொருள் : பொறியியலில் வலிவுத்தட்டு பயன்படுத்தப்படாதபோது இரு உறுப்புகளைப் பிணைப்பதற்குப் பயன்படும் இடைவெளி அடைப்புப் பொருள்கள்

filler specks : (குழை.) அடைப்புக் கறைகள் : பிளாஸ்டிக் பிணைப்புகளில் பலவித வண்ணங்களில் காணப்படும் மரத்தூள், கல்நார் போன்ற அடைப்புப் பொருள்களினால் உண்டாகும் மாறுபட்ட வண்ணப்புள்ளிகள்

fillet : கட்டுமான வளைவிணைப்பு : ஒரு கோணத்தில் சந்திக்கும் இரு பரப்புகளை இணைக்கின்ற குழிவான வளைவு. இதில், கூர்மையான கோணம் தவிர்க்கப்படுவதால், வடிவமைப்புக்கு வலிவும் அழகும் கூடுகிறது

filling : நிரவுப் பொருள் : பருத்தித் துணிகளில் இடைப்பிறிதிட்டு நிரப்பிக் கலவை செய்யும் களிமண் அல்லது மாப்பொருள். இது துணிக்கு எடையும் விறைப்பும் அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது

filling in : (க.க.) இடை நிரப்பி : கட்டிடங்களில் முகப்புக்கும் பின் புறத்திற்குமிடையிலான சுவரின் மையத்தில் இட்டு நிரப்புவதற்கான அமைவு

fillister : சறுக்கு வழி : (1) பல கணிக் கண்ணாடியின் சறுக்குச் சட்டம் (2) ஒரு கொண்டைத் திருகின் நீள் உருளை வடித்தலைப் பகுதியில் திருப்புளி செல்வதற்கான வரிப் பள்ளம்

film : (குழை.) மென்படலம் : மெல்லிய பிளாஸ்டிக் படலம்

filter : (மின்.) வடிப்பான் : தூண்டுச் சுருள்களும் கொண்மிகளும் உடைய ஒரு சாதனம். இது பல்வேறு மின்னோட்டங்களைச் சீராக அமைக்கவும், ஒரு சில மாற்று மின்னோட்ட அலைவெண்களை அகற்றவோ செல்வதற்கு அனுமதிக்கவோ செய்கிறது

filter element : (தானி.) வடிகட்டும் பொருள் : உந்து வண்டிகளில் எண்ணெய் வடிப்பானிலுள்ள துணி போன்ற வடிகட்டும் பொருள். உந்துவண்டி எரிபொருளிலிருந்து தூசு, கசடு போன்ற அயற்பொருள்களை வடிகட்டி நீக்குவதற்குப் பயன்படுகிறது

filter paper : வடிகட்டு தாள் : வடிகட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படும் முற்றிலும் இழைகளினாலான காகிதம்

filtration of water : நீர் வடிகட்டும் முறை : குடிநீரை மணற்படுகைகளில் செலுத்தி மாசுப் பொருள்களை நீரிலிருந்து வடித்தெடுக்கும் முறை

fin : செதில் : (1) ஒரு பெரிய உலோகப் பகுதியில் பக்கத்தில் அல்லது விளிம்பில் ஏற்படுகின்ற நீர் போன்ற மெல்லிய விரிவாக்கப் படலம்

(2) வானூர்திப் பின்புறத்தின் நிமிர்நேர் விளிம்பு

(3) நிமிர் நேர் விளிம்புடைய தகடு

fine arts : நுண்கலைகள் : கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை போன்ற கவின் கலைகள்

fine feed :(எந்.) நுண்ணூட்டு : செப்பமற்ற ஊட்டுக்கு எதிர்மாறானது. அளவில் மிக நுண்ணிய ஊட்டு

fineness ratio : (வானூ.} நுண்மை விகிதம் : விண்வெளிக்கலத்தின் உடற்பகுதி போன்ற ஓர் இழைவரி உடற்பகுதியின் பெரு