பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

fishtail cutter : (எந்.) மீன் வால் வெட்டுளி : வரிப்பள்ளங்கள் அல்லது சுழல் தண்டுகளில் கால்கள் வெட்டுவதற்குப் பயன்படும் கருவி

மீன்வால் வெட்டுளி

fish wire : (மின்.) இழு கம்பி : சுவர் முகடு, ஊடு கடத்தி இவற்றிலிருந்து மின்கம்பிகளை இழுப்பதற்குப் பயன்படும் தட்டையான எஃகுக் கம்பி

fish paper : (மின்.) மின் காப்புத்தாள் : மின் கடத்திகளையும் மின் மாற்றிச் சுருணைகளையும் பொதிவு செய்வதற்குப் பயன்படும் வலுவான மின்காப்புத் தாள்

fission : (இயற்.) அணுப் பிளப்பு : ஓர் அணுவின் உட்கருவைப் பிளப்பதன் விளைவாகக் கதிரியக்கமும், வெப்பமும் உண்டாகும்

fissure : பிளவு : பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச் சந்து பிளப்பு

fitment : தட்டுமுட்டுப்பொருட்கள் : ஒரு சுவரில் அல்லது அறையில் பொருத்தப்படும் சன்னல் கதவுகள், புகைபோக்கிகள், அறைகலன்கள் போன்ற பொருட்கள்

fitting : (வானூ.) (1) தள வாடங்கள் : விமானங்கள் தயாரிப்பதில் பயன்படும் சிறுசிறு உறுப்புகள்

(2) பொருத்துதல் : எந்திரவியலில் எஞ்சின்கள், பொறிகள் முதலிய பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைவாகப் பொருத்துதல்

fittings : (கம்.) துணைக்கருவிகள் : இணைப் பொருத்துவதற்குப் பயன்படும் கருவிகள் fixative : சாய நிலைப்பாட்டுப் பொருள் : சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள்

fixed landing gear : (வானூ.) தரையிறங்கு நிலைப்பல்லிணை : விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தரையிறங்கு பல்லிணை. இதனை இணக்கமற்ற தரையிறங்கு பல்லிணை என்றும் கூறுவர்

fixed light : (வானூ.) நிலைப்பாட்டு விளக்கு : இருளில் நிலையாக ஒளி வீசுகின்ற விளக்கு. இது விமான நிலையங்களில் பயன்படுகிறது

fixed pitch propeller : (வானூ.) நிலை அலகு முற்செலுத்தி : அலகின் கோணம் மாற்றப்படாதிருக்கிற விமான முற்செலுத்தி

fixture : (மின்.) நிலைப்பொருத்தி : விளக்குத் தண்டு அல்லது கொத்தான விளக்குகளின் தொகுதி. எந்திர சாதனங்களில் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய உறுப்புகளைத் தயாரிப்பதில் பயன்படும் சாதனம்

fixture splice : (மின்.) பொருத்துப் பொறியிணைவு :முதன்மை மின் கடத்தியைச் சுற்றி நெருக்கமாகச் சுற்றப்பட்டுள்ள பொருத்து கம்பி. இந்த முதன்மை மின் கடத்தியின் முடிவில், பொருத்துக் கம்பியின் சுருணைகளுக்குப் பின்புறமாக இறுக வளைக்கப்பட்டிருக்கும்

பொருத்துப் பொறியிணைவு

fixture wire : (மின்.) பொருத்து கம்பி : இது பொதுவாக 16-18 வரையளவுடையது; திடமானது; பிரியிழையுடையது; மின்காப்பிடப்பட்டது. இது மின் பொருத்து கருவிகளில் மின்கம்பி இணைப்பதற்குப் பயன்படுகிறது