பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
279

flagging : கல்பாவுதல் : தட்டையான தளவரிசைக் கற்களால் தளம் பாவுதல்

flagstones : பாவுகற்கள் : தளவரிசைக்கான தட்டையான தள வரிசைக் கற்கள்

flam-boyant : (க.க.) அழல் வண்ண ஒப்பனை : அலைத்தெழும் தழல் போன்ற தோற்றம் வாய்ந்த ஒப்பனை வேலைப்பாடு

flame hardening : (உலோ.) அனல் வழிக் கெட்டியாக்கம் : ஆக்சி அசிட்டிலீன் சுடர் மூலமாக எஃகைச் சூடாக்கிக் குளிர்விப்பதன் மூலம் எஃகைக் கெட்டிப்படுத்தும் முறை

flaming arc : (மின்.) எரிசுடர் : உள்ளீடகற்றிய கனிமக் கார்பன்கள் பயன்படுத்தப்படும் சுடர் விளக்கு. இது அதிக அளவுச் சுடரொளியை உண்டாக்க வல்லது

flaming of arc : (மின்.) சுடர்ப்பிழம்பு : தொலைவில் லைக்கப்பட்டுள்ள இரு கார்பன்களுக்கிடையில் உள்ள் அனற்பிழம்பு வீசும் சுடர்

flange : (எந்.) விலா விளிம்பு : ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு, இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும்

flanged pulley : (எந்.) விளிம்புக்கப்பி : ஒரு விலா விளிம்புள்ள ஒரு கப்பி. இதில் முகத்தின் ஒரு விளிம்பின் விட்டம் அதிகமாக இருக்கலாம். இது ஒரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும். இரு விளிம்புகளின் விட்டமும் அதிகமாக இருந்தால் அது இரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும்

flange nut : (எந்.) விளிம்பு மரை: அகன்ற விளிம்புடைய ஒரு மரை. இது தனி வளையத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது

flange pipe : (கம்.) விளிம்புக்குழாய் : மற்றக் குழாய் இணைப்புகளுடன் இணைப்பதற்காக முனைகளில் விளிம்புகளுடைய நீராவி அல்லது நீர்க்குழாய், வார்ப்பிரும் புக் குழாய்களில், இந்த விளிம்புகள் வார்ப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும்

flange union : (கம்.) விளிம்பு இணைப்பு : இணைக்கப்படவேண்டிய குழாய்களின் முனைகளுடன் இழைவரி மூலம் - இணைக்கப்படுவதற்குரிய ஓர் இணைவிளிம்புகள் குழாய்களை இணைக்கும்போது இந்த விளிம்புகள் மரையாணியால் இறுக்கப்படும்

flange wheel : (எந்.) விளிம்புச் சக்கரம் : தண்டவாளத்திலிருந்து சக்கரம் இறங்கிவிடாமல் தடுப்பதற்காக விளிம்புகளுள்ள ஊர்திச் சக்கரம்

flank : (க.க.) புடைச்சிறை : ஒரு கவானின் பக்கப் பகுதி. எந்திரத்தில், இடைவெளிக்கோட்டிற்குக் கீழேயுள்ள பல்லிணையின் பக்கப் பகுதி

flap : (வானூ.) ஆடல் விளிம்பு : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் பின்பகுதியாக அமைந்துள்ள கீலுள்ள அல்லது திருகு குடுமியுள்ள தளம். இது மேல் வளைவினை மாற்றுவதற்கு உதவுகிறது

flapping_angle : (வானூ.) ஊசலாட்டக் கோணம் : விமானத்தில் சுழல் அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள தளத்திற்குத் தொடர்பான சுழலும் சிறகு அமைப்பின் ஓர் அலகின் வீச்சளவு. அச்சின் படுகோணத்திற்கும் திரும்பு கோணத்திற்குமிடையிலான வேறுபாடு