பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
281

flashpots : மின்னொளிக் கலங்கள் : மின்னொளித்தூள் நிரப்பிய கொள்கலங்கள். இவை குறுக்குவெட்டு மின்னோட்டம் மூலம் மின்னியல் முறையில் இயக்கி வைக்கப்படும்

flask : (வார்.) வார்ப்புச் சட்டகம் :வார்ப்படச் சாலையில் வார்ப்படம் திணித்து அடைக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான சட்டகம்

வார்ப்புச் சட்டகம்

flat : (அச்சு.) நீளத்தாள் : மடிக்கப்படாத தாள். பொதுவாக 43 x 71செ.மீ. அளவு வரையிலான தாள்கள் இப்பெயரில் அழைக்கப்படுகின்றன

flat arch or jack arch : சமதளக்கவான் : வளைவடிச் செதுக்கு மானம், வளை முகட்டின் வெளிப்புற வளைவு இரண்டும் சமதளமாக இருக்கும் ஒரு கட்டுமானம்

flat bed : (அச்சு.) சமதள அச்சுப் படிவம் : அச்சு எந்திரத்தில் அச்சடிப்பதற்கான சமதள அச்சுப்படிவம்

flat carving : (மர.வே.) சமதள செதுக்கு வேலைப்பாடு : பின்னணி மட்டும் செதுக்கப்பட்டு, வடிவமைப்புச் சமதளமாக இருக்குமாறு அமைக்கப்படும் செதுக்கு வேலைப்பாடு

flat chisel : (உலோ.வே.) சமதள உளி : உலோகத்தில் சிராய்ப்பு மூலம் சமதளமான மேற்பரப்பை உண்டாக்குவதற்குப் பயன்படும் உலோகத்தாலான உளி

flat drill : (எந்.) சமதளத் துரப் பணம் : ஒரு வகைத் துரப்பணக் கருவி. இதில் வெட்டும் அலகு. இணையான, சாய்வான முனைகளைக் கொண்டிருக்கும். இது உட்புழையுள்ள துவாரங்களை வெட்டுவதற்குப் பயன்படுகிறது

flat moulding : சமதள வார்ப்படம் : மரவேலைப்பாட்டுப் பொருட்களில் இறுதி மெருகு வேலை செய்வதற்குப் பயன்படும் மெல்லிய, சமதளமான பட்டைகள்

flat plate : (அச்சு.) தட்டை அச்சுத் தகடு : வேறுபாட்டு முனைப்பு அதிகமின்றி, செதுக்கு வேலை செய்யப்பட்ட அச்சுத் தகடு

flat pull : (அச்சு.) சமதளப் பார்வைப் படி : அச்சு வகையில் அடிப்பதிவு அல்லது மேற்பதிவு செய்து எடுக்கப்பட்ட பார்வைப் படி

flat roof : (க.க.) சமதள முகடு : மழைநீர் வடிவதற்குப் போதிய பள்ளமுடைய ஒரு முகடு

flat skylight : (க.க.) சமதள மேல் சாளரம் : நீரை வடித்துக் கொண்டு செல்வதற்குப் போதிய அளவு மட்டுமே பள்ளமுடைய சமதள மேற்பரப்பு கொண்ட சாளரம்

flat spin : (வானூ.) சமதளத்திருகியக்கம் : விமானத்தில், நீள