பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

வாக்கு அச்சு, கிடைமட்ட அச்சிலிருந்து 45°க்குக் குறைவாக இருக்கும் திருகியக்கம்

flat spots : (வண்.) சமதளப் புள்ளிகள் : வேலைப்பாடு முடிவுற்ற மேற்பரப்பில் உள்ள பளப்பில்லாத புள்ளிகள். இப்புள்ளிகள், சீரற்ற மேற்பரப்புப் பூச்சுமானம் காரணமாக ஏற்படும் நுண்துளைகளாகும்

flatter : தட்டையாக்குச் சம்மட்டி : கொல்லர்கள் தட்டையாக அடிப்பதற்குப் பயன்படுத்தும் ஒருவகைச் சம்மட்டி

flat-tube radiator : (தானி.) சமதளக் குழாய்க் கதிர்வீசி : தட்டையான குழாய்களினாலான கதிர்வீசி. இதில் வெப்பம் கலத்திற்குக் கலம் நேரடியாகப் பாய்வதற்குப் பதிலாக, இரண்டு மூன்று மடங்கு நீளமாக இருக்கும் வகையில் குழாய்கள் வளைக்கப்பட்டிருக்கும். இந்த வளைவு நீரை இருத்தி வைத்துக் கொண்டு அதிகக் குளிர்ப் பரப்பினை உண்டாக்குகிறது. இதனைப் பொதுவாகத் தேன் கூட்டுக் கதிர்வீசி என்பர். ஆனால், உண்மையில் இது தேன் கூட்டின் அமைப்புடையதன்று

flaw : வெடிப்பு/பிளவு : வார்ப்படத்தில் ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.பொதுவாக, செயற்படுவதைத் தடை செய்யும் பழுது

flax : (தாவ.)ஆளிவிதைச்செடி : பல நாடுகளில் வளரும் செடி. இது 2.5-10செ.மீ.வளரும். இதன் விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் நாரிலிருந்து இழைகள் தயாரிக்கப்படுகின்றன

flaxseed : (தாவ.) ஆளிவிதை :ஆளிவிதைச் செடியிலிருந்து கிடைக்கும் விதை. இந்த விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது

flax twine : ஆளிச் சரடு : ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் சரடு. இது முனைகளையும் பாய்களையும் தைப்பதற்குப் பயன்படுகிறது

fleming, john ambrose : ஃபிளெமிங், ஜான் அம்புரோஸ் (1849 - 1945) : மின்மாற்றிகள், உயர் அழுத்த மின்விசை அனுப்பீடு பற்றிய ஆய்வுகள் நடத்திய ஆங்கிலேய மின்னியல் பொறியியலறிஞர். 'ஃபிளெமிங் ஓரதர்' எனப்படும் 'வானொலிக் குழல்' கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர். இவர் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்

fleming"s rule : (மின்.) ஃபிளெமிங் விதி/வலக்கை விதி : ஆட்காட்டி விரல் இயக்கத் திசையினையும், கட்டைவிரல் கடத்தியின் இயக்கத் திசையினையும் காட்டுமாயின், நடுவிரல் மின்னியக்க விசையினைக் காட்டும்

இடக்கை விதி : ஆட்காட்டி விரலை இயக்கத் திசையை நோக்கியும், நடுவிரலை கடத்தியில் மின்னோட்டத்தின் திசையிலும் காட்டும்போது, கட்டை விரல் கடத்தி இயங்கத் தொடங்கும் திசையைக் காட்டும். இந்த விதிகள், ஒரு மின்னாக்கி சுழலும் திசையினை அல்லது ஒரு மின்னாக்கியின் பொது மின்னோட்டத்தின் முனைமையைத் தீர்மானிக்க உதவுகின்றன

flemish bond : (க.க.) பிளெமிஷ்பாணிக் கவிகைப்பிணைப்பு : பிளெமிஷ் பாணியில் அமைந்த கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு

flemish bond double : (க.க.)