பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
283

இரட்டைக் கவிகைப் பிணைப்பு : வெளிப்புறச்சுவரின் உட்புற வெளிப்புறப் பரப்புகள் ஃபிளெமிஷ் பாணியில் பற்றுமானமாக அமைக்கப்படும்போது முன்புறச் செங்கற்கள் அல்லது கற்கள் அனைத்தும் முழுமையானவையாக இருக்கும். இவற்றை "இரட்டைக் கவிகைப் பிணைப்பு" என்பர்

flemish garden bond : (க.க.) ஃபிளெமிஷ் தோட்டக் கவிகைப் பிணைப்பு : இதில் ஒவ்வொரு வரிசையிலும் கவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கற்கள் மூன்று அமைந்திருக்கும். அவற்றைத் தொடர்ந்து முகப்புச் செங்கற்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வரிசையிலுள்ள முகப்புச் செங்கல் மேலும் கீழுமுள்ள இடைச் செங்களுக்கிடையில் அமைந்திருக்கும்

fleur-de-lis : ஃபிரெஞ்சு அரசுச் சின்னம் : ஃபிரான்ஸ் நாட்டரசரின் அரசுச் சின்னம். இது அலங்கார வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது

flexible conduit : (மின்.) துவள் காப்புக் குழாய் : மின் கடத்திகள் பாதுகாப்பாக வைக்கப்படும் துவள் உலோகக் குழாய்

flexible coupling : துவள் இணைப்பி : துவள்கின்ற உருண்டை இணைப்பி. இதில் தண்டின் முனைகளுடன இணைக்கப்பட்டுள்ள இரு வட்டத் தகடுகள் அமைந்திருக்கும். இந்த தகடுகள் அவற்றின் முகப்புகளுக் கிடையில் வைக்கப்படும் உருண்டையில் சுழலும் வண்ணம் அம்முகப்புகளில் புழை செய்யப்பட்டிருக்கும்

flexible mould : (குழை.) துவள் வார்ப்புப்படம் : திரவ பிளாஸ்டிக்குகளை வார்ப்படம் செய்வதற்குப் பயன்படும் ரப்பர் மரப்பாலினாலான அல்லது நெகிழ்திறனுள்ள பிசினிலான வார்ப்படம்

flexible shaft : (எந்.) துவள் சுழல் தண்டு : துவள் காப்புக் குழாயினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சங்கிலித்தொடர் இணைப்புச் சுழல்தண்டு பயன்படுத்த இயலாத இடங்களில் விசையினைச் செலுத்துவதற்குப் பயன்படுகிறது

flexure formula : (பொறி.) வளைவுச் சூத்திரம் : உத்தரங்களில் கிடைமிட்ட விறைப்பு, அழுத்த இறுக்கவிசைகளைத் தொடர்பு படுத்தும் சூத்திரம்

M = SI / C அல்லது S = Mc/ I

இதில், 'S' என்பது, உத்தரத்தின் புற இழை எதிலும் வளைத்திறன் காரணமாக அழுத்தும் இறுக்க விசையின் அலகு 'C' என்பது அந்த இழையிலிருந்து மையப்பரப்பிற்குள்ள தூரம்; 'M' என்பது தடைத்திறன் அளவு 1 அந்தப் பகுதியுள்ள இயக்கத்திறன் அளவு

flexure linkage :(கணிப்.) வளைவு இணைப்பு :

flicker : (மின்.) சுடர் நடுக்கம் : தொலைக்காட்சியில் படம் தாறுமாறாக அசைவுறுதல் அல்லது நடுங்குதல்; ஒளித் தெளிவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு

flier : (க.க.) தாவுபடி : படிக்கட்டின் நாற்கட்டான ஒரு படி

fliers : (அச்சு.) முன்னறிவிப்பு விளம்பரம் : எதிர்வரும் ஒரு நிகழ்ச்சியை அறிவிப்பதற்கான, கவர்ச்சியான வடிவமைப்பிலுள்ள ஒரு சிறிய விளம்பரம்