பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

flight indicator : (வானூ.) பறக்கும் தூரங்காட்டுங் கருவி : விமானம் பறக்கும் தூர அளவினைக் காட்டும் கருவி

flight bird : (விண்.) சோதனை ஏவுகணை : சோதனைக்காகப் பறக்க விடுவதற்குக் காத்திருக்கும் ஒர் ஏவுகணை

floating anchor : மிதவைச் சட்டம் : மிதந்து செல்லும் நிலையில் கப்பலின் காற்றுவாட்ட வேகம் தடுக்கும் மிதவைச் சட்டம்

flight of stairs : (க.க.) படிக்கட்டு வரிசை : தளங்களுக்கிடையிலான படிக்கட்டு வரிசைகள். இரு வரிசைப் படிக்கட்டுகளுக்கிடையில் ஒரு தளம் அமைந்திருக்கலாம்

flight path : (வானூ.) பறக்கும் பாதை : விமானம் பறக்கும் பாதை. அதன் புவியீர்ப்பு மையம் செல்லுகின்ற பாதை

flight path angle : (வானூ.) பறக்கும் பாதைக் கோணம் : விமானம் பறக்கும் பாதைக்கும் அதன் கிடைமட்டத்திற்குமிடையிலான கோணம்

flight recorder : (வானூ.) விமான இயக்கப் பதிவுக் கருவி : விமானம் இயங்குவது பற்றிய சில குறிப்புகளைப் பதிவு செய்வதற்கான கருவி

flint : (கணி.) சக்கிமுக்கிக்கல் : மங்கலான நிறமுடைய படிகக்கல் வகையைச் சேர்ந்த பளிங்குக் கல்

flip titles : (தொலை.) சொடுக்குப் பெயர்ப் பட்டிகள் : வளையப் பிணைப்புச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெயர்அட்டைகள். இவை தனியாகவோ ஒன்றன்பின் ஒன்றாகவோ ஒளிப்படக்கருவியின் முன்புள்ள இடத்தில் திடீரெனத் தோன்றுகிறது

flitch beam : துண்டு உத்தரம் : மையத்திலுள்ள ஓர் இரும்பு உத்தரத்தைச் சூழந்துள்ள புற உத்தரத் துண்டுகள், மரையாணிகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் உத்தரங்களின் ஒருங்கிணைப்பு

float : (வானூ.) மிதவை : (1) விமானம் நீரில் மிதப்பதற்கு அனுமதிப்பதற்கு அந்த விமானத்தில் இணைக்கப்பட்டுள்ள நீர் புகா அமைப்பு

(2) எந்திரத்தில் அரம் போன்ற வடிவுடைய ஒரு கருவி. இதில் ரம்பத்தில் உள்ளது போன்ற பற்கள் அமைந்திருக்கும்

(3) சுவர்களின் பரப்பில் பூச்சுப் பொருட்களைப் பூசுவதற்குப் பயன்படும் அகலமான இழைப்புக் கரண்டி

(4) ஊடிழையுடன் பின்னிச் செல்லும் பாவிழைப் பகுதி

மிதவை

float carburetor : (தானி.) மிதவை எரி-வளி கலப்பி : உந்து வண்டியில் எரிபொருளின் உயரத்தைக் கட்டுப்படுத்துவதற்குற்றதக்கையினாலான அல்லது உட்புழையுள்ள உலோகத்தினாலான மிதவையுள்ள எரி-வளி கலப்பி

floating : சாந்துப்பூச்சு : சாந்து, சிமெண்டு முதலியவற்றைச் சமதளமாகப்பூசுதல். இதற்குப் பயன்படும் சாதனம் "மிதவை" எனப்படும்

floating axle : மிதவை அச்சு : பாரங்கள் அல்லது அழுத்தங்கள்