பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

flush switch : (மின்.) நேர்தளமின் விசை : சுவரில் உள்ளமைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் இதில் இயங்கும் எந்திரப் பொறியமைவு மட்டுமே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்

flush valve : (கம்.) நேர்தள ஓரதர் : விசைநீர் கொட்டுவதன் மூலம் துப்புரவு செய்வதற்குப் பயன்படும் ஓரதர். இதில், நீர் வழங்கும் குழாய்களிலிருந்து நீர் விசையுடன் பாய்ந்து தொட்டிகளைத் துப்புரவு செய்யும்

flute : (க.க.) (1) வரிப்பள்ள ஒப்பனை : தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ஒப்பனை (2) நெசவுத்தறியின் ஓடம்

fluted reamer : வரிப்பள்ளத் துளைச் சீர்மி : நீளவாக்கில் வரிப் பள்ளங்கள் இடப்பட்ட ஒரு துளைச் சீர்மி. இது பக்கங்களை வெட்டிச் சீர்படுத்த உதவும்

fluting cutter : (எந்.) வரிப்பள்ள வெட்டி : நீர்வரிப்பள்ளம் இட்டு வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படும் வெட்டுக் கருவி

flutter : (வானூ.) ஒழுங்கிலா அதிர்வு : விமானத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏற்படும் தடுமாற்றம் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு உண்டாகும் ஒழுங்கில்லாத அதிர்வு. இது அந்த உறுப்பின் மற்றப் பண்புகள் காரணமாகச் சீரடைகிறது

flux : (வேதி.) உருகு பொருள் : உலோகங்களை அல்லது கனிமங்களை எளிதில் உருகச் செய்வதற்கு அவற்றுடன் சேர்க்கப்படும் காரங்கள், போரக்ஸ், சுண்ணாம்பு ஃபுளோரைட் போன்ற கலவைப் பொருள்கள்

flux density : (மின்.) பெருக்கடர்த்தி : மின்தூண்டலில், ஓர் அலகு பரப்பளவில் தூண்டலுக்குச் செங்குத்தாகச் செயற்படும் விசை அல்லது தூண்டல் விசைக் கோடுகளின் எண்ணிக்கை. தங்கு தடையற்ற இடப்பரப்பில் பெருக் கடர்த்தியும், புலச்செறிவும் எண்ணிக்கையில் சமமாக இருக்கும். ஆனால் காந்தப் பொருளினுள் இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டிருக்கும்

flux leakage : (மின்.) பெருக்கிக் கசிவு :பிணைப்பு மின்சுற்று வழியை இணைக்காத பெருக்கியின் ஒரு பகுதி

fluxometer : பெருக்களவி : எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் கசிவை அளவிடும் கருவி

fly : (வானூ.) (1) பறத்தல் : விமானத்தை நெறிப்படுத்தி ஓட்டி வானில் பறந்து செல்லுதல். (2) பயணிகளை வான்வழியில் விமானத்தில் இட்டுச் செல்லுதல். (3) நீர் உருளை அச்சு எந்திரத்தில் தாள்களை ஊட்டுவதைக் கட்டுப்படுத்தும் கருவி

fly boat : மிதவை விமானம் : கடலில் படகு போல் மிதக்கக் கூடிய விமானம்

fly cutters : (எந்.) விரைவு வெட்டுக் கருவி " கடைசல் எந்திரத்திலும், பிற எந்திரங்களிலும் தொகுதியாக அல்லது ஏந்தமைவாகவுள்ள வெட்டுக்கருவிகள். உலோகச் சலாகைகளின் முனைகளில் வேலைப்பாடுகள் செய்வதற்கு உதவுகிறது

flying boat : (வானூ.) கடல் விமானம் : கடலில் படகு போல் மிதக்கவல்ல விமானம். இதன் உடற்பகுதிநீரில் மிதக்க ஏற்றவாறு அமைககப்பட்டிருக்கும். அது விமானத்தின் கட்டுமானச் சட்டமாகவும் இயங்கும். இதற்குப் பக்க