பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

folders : (அச்சு.), மடிதாள் : அச்சடித்த தாள்களின் மடிக்கப்பட்ட பக்கங்கள். பொதுவாக ஒரு தாள் ஒரு முறை மடிக்கப்பட்டு நான்கு பக்கங்களாகச் செய்யப்படும்

folding machine : (அச்சு.) மடிக்கும் எந்திரம் : அச்சடித்த தாள்களைத் தானே மடிக்கும் எந்திரம். நூல்கள், செய்தியிதழ்கள் முதலிய வற்றின் பக்கங்களை மடிப்பதற்கு இது பயன்படுகிறது

folding rule : மடக்கு அளவுகோல் : அளவிடுவதற்குப் பயன்படும் மடக்கக் கூடிய ஒரு கருவி

foliated : இலை வேலைப்பாடு : இலைகள் போன்ற வடிவமைப்புடன் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு

folio : (1) இருமடி : ஒரு தடவை மடித்த தாள். அவ்வாறு மடித்துக் கட்டுமானம் செய்த புத்தகத்தையும் குறிக்கும்

(2) பக்க எண் : அச்சடித்த புத்தகத் தாள் எண்

follow board : (வார்.) உண்மை வார்ப்படப் பலகை : உள்ளமைவாகவுள்ள அல்லது வெட்டியெடுக்கப்பட்ட வார்ப்படப் பலகை. இதில், பயன்படுத்தப்படவிருக்கும் தோரணி பிரிவுக் கோட்டுடன் பொருந்தியிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்தும்போது மணல் மூலம் பகுப்பீடு செய்ய வேண்டியதில்லை

follower : (எந்.) (1) இயக்கு எந்திரம் : மற்றொரு சக்கரத்தினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். (2) இயக்கு சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்புப் பகுதிக்கு எதிராக இயங்கும் உருளை அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள உருளையும் புயமும்

follower rest : தொடர் ஆதாரம் : கடைசல் வேலைப்பாட்டுக்காக ஊர்தியுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஆதாரம். இதுவெட்டுக் கருவியைத் தொடர்ந்து அல்லது அதற்கு எதிராக இயங்கி வேலைப்பாடு செய்யப்படும் பொருள் கருவியிலிருந்து துள்ளிச் சென்று விடாமல் தடுக்கிறது

font : தீக்கைக் கலம் :(1) தீக்கைக் குரிய நீர் வைக்கும் கலம். (2) அச்செழுத்து முகப்பு : அச்செழுத்தின் முகப்பு வடிவளவு

fontanelles : (உட.) உச்சி மையம் : குழந்தையின் தலையில் எலும்பு வளராமல் மென்தோல் மட்டும் உள்ள உச்சி மையம்

உச்சி மையம்

foolscap : முழு அளவுத் தாள் :எழுதுவதற்குத் தட்டச்சு செய்வ தற்கும் பயன்படும் 33.x 41 செ.மீ. வுள்ள தாள்

foot : காலடி : தட்டுமுட்டுப் பொருட்களின் ஆதாரக் காலடிப் பாதம்

foot and mouth disease : (நோயி.) கால்-வாய் நோய் : செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் கொப்புளங்கள் ஏற்படும்

foot brake : (தானி.) கால்தடை : உந்து வண்டிகளில் காலினால் இயக்கப்படும் தடை. இது கையினால் இயக்கப்படும் தடையிலிருந்து வேறுபட்டது