பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
293

(2) காங்கிரீட் ஊற்றி தேவையான வடிவத்தைத் தயாரிப்பதற்கான கலம்

(3) அச்சிடுவதற்காகத் தளைச் சட்டத்தில் முறையாக வைத்து இறுக்கப்பட்ட அச்சுருப் படிவம்

form factor : (மின்.) வடிவக் காரணி : ஓர் மாற்று மின்னோட்ட அலையின் சராசரி அளவில் உள்ள படியான அளவின் வீத அளவு. அனைத்து நெடுக்கை அலைகளும் 1:11 என்ற வடிவக்காரணியை உடையவை

formaldehyde : (வேதி.) ஃபார்மால்டிஹைடு (HCHO) : நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்படும் தொற்று நீக்கு மருந்துகளில் மிகச் சிறந்தது. சாயப் பொருட்கள், மைகள், தோல் பதனிடுதல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது

format : நூல் வடிவளவு : அச்சிட்டு, கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு நூலின் வடிவம், அளவு, அச்செழுத்து முகப்பு, பக்க ஓர இடம், பொதுவான பாணி ஆகியவற்றைக் குறிக்கும் சொல்

formed plate : (மின்.) வடிவாக்கத் தகடு : ஒரு தனிவகைச் சேமக்கலத்திலுள்ள் தகடு.இது மின்னேற்றமும் மின்னிறக்கமும் செய்யும் முறையின் மூலமாக உருவாகிறது

forming process : (மின்.) வடிவாக்கச் செய்முறை : சேமக்கலங்களில், கந்தக அமிலத்திலும், நீரிலும் ஈயத்தகடுகளை மூழ்கச் செய்து, அவை ஈய ஆக்சைடாகவும் ஈயமாக ஆகும் வரையில் மின்னேற்றமும்,மின்னிறக்கமும் செய்து சேமக்கலம் உண்டாக்கும் செய்முறை

forming rolls : (உலோ; வே.) வடிவாக்கச் சுருள்கள் : பல்வேறு அளவு கனமுள்ள தகட்டு உலோகத்திற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய மூன்று தொடர் சுருள்கள். இவை தேவையான விட்டத்துடன் நீர் உருளைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன

forming tools : வடிவாக்கக் கருவிகள் : வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் எந்த வடிவத்தை உருவாக்க வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டுமுனைகள் அமைந்துள்ள கருவிகள்

form truck : (அச்சு.) அச்சுருப்படிவ ஊர்தி : கனமான அச்சுருப் படிவங்களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் இரு சக்கர ஊர்தி

formula : (கணி.) சூத்திரம் : கணிதத்தில், அல்லது இயற்கணிதத்தில், ஒரு கணக்கிற்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான கணிதச் செய்முறைகளைக் குறிப்பதற்கு முறைபட அமைக்கப்பட்ட இலக்கங்கள், எழுத்துக்கள், சைகைகள் குறியீடுகள் அடங்கிய வாய்ப்பாடு

form wound coil : (மின்.) வடிவச் சுற்றுச்சுருள் : ஒரு மரச்சட்டத்தில் அமைக்கப்படும் அல்லது வடிவாக்கம் செய்யப்படும் மின்னகச் சுருள் அல்லது சுருள். பின்னர் இந்தச் சுருள் மின்னகத்தில் முழுமையாக வைக்கப்படுகிறது

forward welding : (பற்ற.) முனைப் பற்றவைப்பு : சுடர்பிழம்பு சுட்டிக் காட்டுகிற உலோகத்தை உருக்குதல்

forwarding : (அச்சு.) முந்துறு கட்டுமானம் : புத்தகத் தாள்களை ஒன்று சேர்த்துத் தைத்த பிறகு, கட்டுமானம் செய்யும் முறை