பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

fouling : அடைப்புறுதல் : நீராவிக் கொதிக்கலன்களிலும் நீராவி நீளக் குழாய்களிலும் மேலேடு படிந்து அடைப்புறுதல். இதனால் எந்திரங்களிலும், உறுப்புகளிலும் பொதுவாக இயக்கம் பாதிக்கப்படும்

foundation : (க.க.) அடித்தளம் : கட்டிடத்திற்கு அல்லது சுவருக்குக் கீழே தரைமட்டத்திற்குக் கீழே போடப்படும் அடிப்படை ஆதாரம். இந்த அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானம் கட்டப்படுகிறது

foundation bolts : அடித்தள மரையாணி : எந்திரங்களை அல்லது கட்டமைவு உறுப்புகளை அவற்றின் அடித்தளத்துடன் இறுக்கிப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மரையாணிகள்

foundation plate : (பொறி.) அடித்தளத் தட்டம் : (1) ஓர் இறைப்பி, ஓர் எஞ்சின் அல்லது ஓர் இயக்கி இணைத்துப் பிணைக்கப்படும் ஒரு தட்டம் (2) வார்ப்படத் தொழிலில் வீச்சளவினை நிலைப்படுத்துவதற்காகக் கதிரைத் தாங்குவதற்கென வார்ப்படத்தின் அடிப்பகுதியில் வைக்கப்படும் வார்ப்பிரும்புத் தட்டம்

foundry : வார்ப்படச் சாலை : வார்ப்படத் தொழில் நடைபெறும் கட்டிடம் அல்லது இடம்

foundry sand : வார்ப்பட மணல் : வார்ப்படங்களில் தேவையான வடிவங்களைப் பெறுவதற்கு உருகிய உலோகத்தை ஊற்றுவதற்குப் பயன்படும் மணல்

fourdrinier : ஃபூர்டிரினியர் எந்திரம் : காகிதம் தயாரிப்பதற்காகப் பயன்படும் எந்திரம். இந்த எந்திரத்தின் உதவியால் முதன் முதலில் அச்சுத் தயாரிக்கப்பட்டது. இந்த எந்திரத்தை முதலில் கண்டுபிடித்தவர் லூயி ராபர்ட். இதனை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹென்றி மற்றும் சீலி ஃபூர்டிரினியர் என்பார் பிரியான் டோங்கின் உதவியுடன் சீரமைத்தார்

fournier : (அச்சு.) ஃபூர்னியர் : அச்செழுத்தில் அலகு முறையைக் கண்டுபிடித்த ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியர் சைமன் ஃபூர்னியர்

four pole : நாற்துருவம் : ஒரு விசையில் உள்ளது போன்று நான்கு தொடர்புகளை உடைய, ஒரு மின்னாக்கியில் உள்ளது போன்று நான்கு துருவங்களை உடைய

four-pole design : (தானி.) நாற்கோல் வடிவமைப்பு : நான்கு களக் கோல்களைக் கொண்ட மின்னாக்கி அல்லது தொடக்க இயக்கி

four-stroke cycle : (தானி.) நான்கடிச் சுழற்சி : எஞ்சினின் நான்கடிகளில் முடிவுறும் ஒரு விசைச் சுழற்சி உந்து வண்டியின் எஞ்சினில், கீழ்நோக்கிய முதல் அடி உள்ளிழுப்பாகவும், அடுத்த மேல்நோக்கிய அடி, அழுத்தத்தை அனுமதிப்பதாகவும், மூன்றாவது அடி எரியூட்டுதலாகவும் விரிவாக்கமாகவும், நான்காவது அடி வெளியேற்றமாகவும் அமையும்

fourway switch : (மின்.) நான்குவழி விசை : மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலிருந்து மின்விசையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் விசை. இதற்கு மூவழி விசைகள் இரண்டும், மற்ற அனைத்தும் நான்குவழி விசைகளாகவும் அமைந்திருக்கும்