பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
295

four-wheel drive : (தானி.) நான்கு சக்கர இயக்கி : முன்னும் பின்னும் விசையியக்கம் தூண்டு கிற இருசுகளையுடைய ஓர் இயக்கி. இது நான்கு சக்கரங்களுக்கும் இயக்க விசையைச் செலுத்தும்

foxed : (தாள்.) உருவழிந்த : பூஞ்சணம்பற்றுவதால் காகிதம் உருவழிதல் அல்லது அதில் புள்ளிகள் விழுதல்

fox lathe : (எந்.) நரி கடைசல் எந்திரம் : திருகிழை வெட்டுவதற்கான செதுக்குச் சலாகை அல்லது நரி' உள்ள பித்தளை வேலைப்பாட்டுக்கான கடைசல் எந்திரம்

fraction : பின்னம் : (1) ஒரு பொருளின் சிறு கூறு. (2) கீழ்வாய் எண்

fractional distillation : (வேதி.) வடித்துப் பிரித்தல் : படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல்

fractional horizantal spacing : (கணிப்.) பகுமுறைக் கிடைநிலை இடைவெளி அமைப்பு

fractional verticle paper spacing : (கணிப்.) பகுமுறை செங்குத்துக் காகித இடைவெளி அமைப்பு

fracture : (உலோ. எந்.) முறிவு : உலோகங்கள் திடீர் அதிர்ச்சியினால் அல்லது அளவுக்கு மீறிய அழுத்தத்தினால் உடைந்து முறிதல்

frame : (க.க.) (1) நிலைச்சட்டம் : சன்னல்கள், கதவுகள் முதலியவற்றின் மரநிலைச் சட்டம் (2) மரச்சட்டம் : தளங்களையும் கூரைகளையும் தாங்கும்மரச் சட்டம் (3) சித்திர வேலைத் துணை வரிச்சட்டம் (4) அச்சுப்பக்க உருப்படிவச் சட்டம் (5) தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்திற்குரிய வரைத்தொகுதி (6) திரைப்படத்தில், 35 மி.மீ. அல்லது 16 மி.மீ. சுருளிலுள்ள முழுப்படம்

frame high : (க.க.) நிலைச்சட்ட உயரம் : சன்னல் அல்லது கதவுச் சட்டங்களின் மேல்நிலை உயரம். வாயில்-பலகணி அல்லது மேல் விதானம் அமைக்கப்பட வேண்டிய உயரம்

frame of a house : (க.க.) சட்டக வீடு : பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு

frame work : வரைச் சட்டம் : கட்டுமானம் செய்யப்படவிருக்கும் கட்டமைப்பின் புனையா வரைச் சட்டம்

framing : (தக்) உருவரைச்சட்டம் : ஒரு கட்டுமானத்தின் உருவரைச் சட்டம். அதனைக்கட்டுகின்ற செயல்

framing control : உருப்படிவக் கட்டுப்படுத்தி : தொலைக்காட்சியில் படத்தின் மறுபகர்ப்பு வீதத்தை அனுப்பீட்டுக் கருவிக்கு இயைபாக நேரமைவு செய்வதற்கு அனுமதிப்பதற்கு ஒளிவாங்கிப் பெட்டிலுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம்

fraying : (நூ.க.) புரியவிழ்த்தல் : ஒரு நூலுக்கு நுனிமுனை அமைப்பதற்கு ஆயத்தமாக மூட்டு நூல் இழைகளை அல்லது கட்டுத் தளைகளைப் பரவலாக்குதல்

free : (தாள்.) நீர்க்கட்டிலாக் காகிதம் : நீரிலிருந்து எளிதாகப் பிரித்தெடுக்கப்படும் காகிதப் பொருள்