பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
297

பலகணிச் சட்டம். இது தளம் வரையிலும் நீண்டிருக்கும். இது புகுமுக மண்டபத்திற்கு அல்லது மேல் தளத்திற்கு வாயிலாகவும் பயன்படும்

frequency : (மின்.) அலைவெண் : (1) ஒரு மாறு மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் ஏற்படும் இரட்டை அதிர்வுகளின் எண்ணிக்கை

(2) தொலைக்காட்சியில் ஓர் அலகு நேரத்தில் அதிர்வுகளின் அல்லது சுழற்சிகளின் எண்ணிக்கை. வானொலி அலைகள் குறைந்த அலைவெண்களும் நுண்ணலைகளும் உடையவை

frequency departure : (மின்.) அலைவெண் மாற்றம் : அலைவெண் மாற்றத்தில் அலைவெண் மாற்றம் காரணமாக மைய அலைவெண்ணிலிருந்து உடனடியாக ஏற்படும் மாறுதல்

frequency deviation : (மின்.) அலைவெண் விலக்கம் : அலை வெண் மாற்றச் சைகையின் உச்சி நிலையின்போது மைய அலை வெண்ணிலிருந்து மிக அதிக அளவில் ஏற்படும் விலகல்

frequency meter : (மின்.) அலைவெண் அளவி : ஒரு மாறு மின்னோட்ட மானி. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் சுற்றின் அலைவெண்ணை இது நேரடியாகக் குறித்துக் காட்டும்

frequency modulation(தொலை) அலைவெண் மாறுபாடு: பேச்சுக்கும் பாட்டுக்கும் இசைந்த வானொலி அனல் அதிர்வின் மாறுபாடு

frequency response : (மின்.) அலைவெண் உடன் விளைவு : ஒரு குறிப்பிட்ட அலைவெண் வீச்சின் போது செயற்படும் திறனைக் காட்டும் கருவியின் திறனளவு

frequency swing : (மின்.) அலைவெண் ஊசல் : மிக அதிக அளவிலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு அலைவெண்ணின் மொத்த ஊசலாட்டம், இது அலைவெண் விலக்கத்தைப்போல் இருமடங்குக்குச் சமம்

frequency tripler : (மின்.) அலைவெண் முப்பெருக்கி : தகட்டு மின் சுற்று வழியில் அலைவெண் மும்மடங்காகப் பெருக்கப்பட்டுள்ள மின் மிகைப்பு நிலை

fresco : (க.க) சுவர்க்கோல ஓவியம் : ஈரச்சாந்தினைக் கொண்டு ஒவியந் தீட்டும் முறை. இதனைத் தவறுதலாக, உலர்ந்த சுவரில் ஓவியம் வரைவதைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்

fresh air inlet : (கம்.) காற்றோட்ட வாயில் : வீட்டின் வடிகாலிலிருந்து மேல் நோக்கி மாசுற்ற காற்றைக் கொண்டு செல்லும் இணைப்புக் குழாய்

fret : அரிவரிச் சித்திரவேலைப்பாடு : நேர்வரைச் செங்கோணத்தொடர்புக் கோலமான செதுக்கு வேலைப்பாடு

fret saw : சித்திர வேலை இழைவாள் : சித்திரச் செதுக்கு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்

friable : தகர்வுறு : எளிதில் தகர்ந்து விழக்கூடியது

friction : (இயற்.) உராய்வு : ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது நழுவிச் செல்வதைத் தடுக்க முயலும் ஆற்றல். உராய்வு விசையை விட ஒரு விசை அதிகமாக இருந்தால், அது உராய்வினை விஞ்சி, பொருளை நகரும்படி செய்யும், இயக்கத்தடையாற்றலானது, மேற்பரப்புகளுக்கிடையிலான விசையினை உராய்வுக் குண