பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தின் பொதுவான அல்லது திட்டவட்டமான அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக வானூர்தி நிலையத்திலோ, அதன் அருகிலோ அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த ஒரு வழிகாட்டி ஒளிவிளக்கு

air resistance: (தானி.) காற்றுத்தடை: ஒர் ஊர்தி காற்றை ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் விசை

air scoop: (வானூ.) காற்றுவாரி: வானூர்தியிலுள்ள காற்றறைப் பை; உள்ளெரி எஞ்சின்கள், பல்கணிகள் ஆகியவற்றில் காற்றழுத்தத்தை நிலைப்படுத்துவதற்காகவும், காற்றினைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவும் அமைந்துள்ள காற்றுவாரி அல்லது கவிகை

airship: (வானூ.) விண்வெளிக்கலம்: வானூர்தியைவிட எடை குறைந்த ஒரு விண்வெளிக்கலம். இதில் இயக்குப்பொறியும், கட்டுப்பாட்டு அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் இயக்குப் பொறி இயங்காதபோது அது ஒரு சுதந்திரமான பலூன் போன்று செயற்படுகிறது


airship station: (வானூ.) விண்வெளிக்கல நிலையம்: விண்வெளிக்கலங்களை இயக்குவதற்கும் அவற்றின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கும் தேவையான சாதனங்களையும், கூடாரங்கள், பாய்மரங்கள், வாயுப்பொறிகள், பட்டறைகள், தரையிறங்கும் களங்கள் ஆகியவற்றையும் உடைய ஒரு நிலையம்

air shower: (விண்.) காற்றுத்தாரை: வாயுமண்டலத்தில் காணப்படும் மின்காந்த நுண்ணலைத்துகள்களின் ஒரு தொகுதி

air slaked lime: (வேதி.) காற்றில் நீற்றிய சுண்ண நீர்க்கலவை: காற்றில் திறந்து வைத்து ஹைட்ராக்சைடாகவும், கார்பனேட்டாகவும் மாற்றப்பட்ட சுண்ண நீர்க் கலவை. நீரில் நீற்றிய சுண்ண நீர்க் கலவை பயன்படுத்தப்படும் பல காரியங்களுக்கு இது பெரிதும் பயன்படக் கூடியது

air space: (மின்.) காற்று இடைவெளி: ஒரு நேர் மின்னாக்கியில் (டைனமோ) அல்லது மின்னோடியில்(மோட்டார்) உள்ள, காந்தப்புலத்தின் முனை முகங்களுக்கிடையிலான திறந்த இடைவெளி

air speed: (வானூ.) காற்றுவேகம்: காற்றை எதிர்த்து வானூர்தி செல்லும் வேகம்

air speed head: (வானூ.) காற்று வேகத் தலைமுனை மானி: காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தை அளவிடுவதற்கு ஒர் அளவியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி

air-speed indicator: (வானூ.) காற்று வேகம் காட்டும் கருவி: காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி

air spring: (தானி:எந்.) காற்று வில்சுருள்: மிகுந்த திறன் வாய்ந்த அதிர்ச்சி தாங்கிக்கு மற்றொரு பெயர். எண்ணெயும் காற்றும் அடங்கியுள்ள ஒரு நீள் உருளையில் ஒரு குண்டலம் இயங்குகிறது

airtight: காற்று இறுக்கம்: காற்று உட்புகவோ வெளியேறவோ இயலாதபடி இறுக்கமாக அமைக்கப்பட்டது அல்லது அடைப்பிடப்பட்டது