பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299

frithstool : (அ.க.) கூம்பு முக்காலி : ஆங்கிலோ-சாக்சன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டமான முக்காலி

fritted : (மட்.) கண்ணாடிக் கலவையாக்கிய : கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியல் கலவைப் பொருளாக்குதல். தூளாக்கிய பொருளை உருக்கித் திடீரெனக் குளிரவைப்பதன் மூலம் இந்தக் கலவை கிடைக்கிறது

frontispiece : (நூ.க.) முகப்புப் படம் : ஒரு நூலின் பெயர் முகப்புப் பக்கத்திற்கு எதிர்ப்புறத்திலுள்ள படம்

front-wheel drive : (தானி.) முன்சக்கர இயக்கம் : இயங்கும் செலுத்து அச்சுகள் முன்புற முனையிலுள்ளவாறு அமைத்தல். இதில் பின்புற அச்சுகள் இயங்குவதில்லை

frosting : (குழை.) உறைபனி உருவாக்கம் : ஒரு பிளாஸ்டிக்கின் பரப்பில் உறைபனி போன்ற படிகத் தோரணித் தோற்றம் அமைத்தல்

frozen batteries : (தானி.) உறை மின்கலத் தொகுதி : ஒரு மின்கலத் தொகுதி முழுமையாக மின்னிறக்கம் செய்யப்படும்போது வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் கணிசமாக இருக்குங்கால் அது உறைந்துவிடும். குளிர்காலத்தில், உந்துவண்டியினை உடனடியாக ஓட்டுவதாக இருந்தாலன்றி அதன் மின்கலத் தொகுதியில் நீர் படக்கூடாது. அப்படிப் படுமாயின், நீர் மேற்பகுதியில் தேங்கி உறைந்துவிடும்

frozen iron : (வார்.) உறை இரும்பு : திண்மமாகிய இரும்பு, இது ஊற்ற முடியாத அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்

frustum : (வடிக.) அடிக்கண்டம் : அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வடிவில், குவி பரப்பு = மேல் அல்லது அடி ஆதாரங்களின் சுற்றளவுகளின் கூட்டுத் தொகை + 1/2 சாய்வு உயரம்.முழுப் பரப்பு = குவி பரப்பு + மேல் ஆதாரப் பரப்பு + கீழ் ஆதாரப் பரப்பு. கன அளவு = கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்பளவுகளின் கூட்டுத் தொகை + கீழ் - மேல் ஆதாரங்களின் பரப்புகளின் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் x அடிக்கண்டத்தின் செங்குத்து உயரத்தின் பகுதி

fue : எரி பொருள் : விறகு, நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்ற எரிபொருட்கள். இவை, தீமூட்டுவதற்கு அல்லது எஞ்சினை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன

fuel by-pass regulator : (வானூ.) எரிபொருள் பக்கவழி ஒழுங்கியக்கி : அதிமின்னேற்றிய எஞ்சினில், எரிவளி கலப்பி அறையில் அதிலுள்ள காற்றழுத்தத்திற்குமேல் ஒரு குறிப்பிட்ட அளவுதகு எரிபொருள் அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான ஒரு சாதனம்

fuel consumption : (வானூ.) எரிபொருள் நுகர்வு : ஒரு தடை குதிரைத் திறன் - மணியின்போது நுகரப்படும் எரிபொருளின் அல்லது எண்ணெயின் எடையளவு

fuel dope : (வானூ.) எரிபொருள் மசகு : விமானத்தில் வெடிப்பினை மட்டுப்படுத்துவதற்காக எரிபொருளுடன் சிறிதளவில் கலக்கப்படும் பொருள்