பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
301

வெட்டப்பட்டுள்ள மரையாணியின் திருகிழை

fully formed characters : (கணிப்.) முழு வடிவாக்கிய வரி வடிவங்கள்

fully formed character serial printer : (கணிப்.) முழு வடிவாக்கிய வரிவடிவத் தொடர் வரிசை அச்சடிப்பான்

fuming :(மர.வே.)மர முதுமையாக்கம் : வேதியியல் இயைபால் புகையெழுப்பி வெட்டுமரத்திற்கு முதிர்ச்சியூட்டுதல்

fuming sulphuric acid : (வேதி.) புகையும் கந்தக அமிலம் பெட்ரோலியத்தைச் சுத்திகரிப்பதற்குப் பயன்படும், எண்ணெய் போன்ற தோற்றமுடைய பசைத்திரவம். இது வெடிபொருட்கள், சாயப் பொருட்கள். காலணி மெருகு முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

function : (தானி.) சார்பலன் : ஓர் எந்திரத்தின் சார்பலன் என்பது அதன் தனித்தனிச் செயற்பாடுகளின் கூட்டுத் தொகையாகும்

functional disorder : (உட.) உறுப்பியக்கக் கோளாறு : உடலின் ஓர் உறுப்பு இயங்கத் தவறுவதால் ஏற்படும் நோய். எடுத்துக்காட்டு; அஜீரணம்

functional view point: (தானி.) செயல் முறை நோக்கு : ஒரு பொருளின் அல்லது சாதனத்தின் ஒரு செயல் முறையின் குறிக்கோள்

fundamental frequency : (இயற்.) அடிப்படை அலைவெண் : ஒரு சுரத்தின் ஒலி அலை என்பது முக்கியமாக ஓர் அலைவெண் (அடிப்படை அலைவெண்) ஆகும். அதே சமயம், அந்தச் சுரம், அடிப்படை அலைவெண்ணின் இரண்டு, மூன்று மடங்கு அலைவெண்களையும் கொண்டிருக்கும். அதே போன்று, ஒரு மாற்று மின்னோட்டம் அல்லது மின்னியல் அலையும் முக்கியமாக அடிப்படை அலை வெண்ணாக இருக்கும். எனினும், உயர்ந்த அலைவெண்களின் பகுதிகளைக் கொண்டிருக்கும்

fungus :(தாவ.) காளான் : மட்கிய உயிர்ப்பொருள் மீது வரும் நாய்க் குடை, பூஞ்சணம், பூஞ்சக்காளான் புள்ளிப் பூஞ்சை, கருங்காளான் முதலியவை. இவை விதைகளினால் அல்லாமல், நுண்துகள்கள் மூலம் முளைக்கின்றன. இவற்றில் பச்சையம் இருப்பதில்லை

funnel : (பொறி.) (1) புனல் : ஒரு கொள்கலத்திலிருந்து இன்னொரு கொள்கலத்திற்கு திரவங்களை எளிதாக ஊற்றுவதற்குப் பயன்படும் ஒரு முனையில் கூம்பு வடிவ ஊற்று வாயுடைய புனல். (2) புகை வாயில்: நீராவிக் கப்பல்களில் பயன்படுவது போன்ற புகை வாயில்

furlong : ஃபர்லாங் : ஒரு மைல் தொலைவில் எட்டில் ஒரு பகுதி; 220 கஜ நீளம்; 660 அடி, 201மீ

furnace : (பொறி.) உலை : நீரைச் சூடாக்குவதற்கும், உலோகங்களையும் மற்றப் பொருட்களையும் உருக்குவதற்கும், பல்வேறு பொருட்களையும் சூடாக்குவதற்கும், உலர்த்துவதற்கும், வதக்குவதற்கும் எரிபொருள் எரிக்கப்படும் கணப்பு அடுப்பு உள்ள இடம்

furnace brazing : உலை இணைப்பு : உலையிலிருந்து வரும் வெப்பத்தினால் பொடி வைத்து இணைத்திடும் ஒரு செய்முறை

furniture : அறைகலன் : ஒரு கட்டிடத்திலுள்ள மேசை, நாற்காலி போன்ற அலங்காரத் தட்டுமுட்டுப் பொருள்கள்