பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

அச்சுக்கலையில் அச்சுப் படிவங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் மரத்துண்டு அல்லது உலோகத்துண்டு

furniture fenders : அறைகலன் நீள் தாங்கி : அறைகலன்களுடன் இணைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆணி அல்லது திருகுழுனையுடன் கூடிய அரைவட்ட வடிவ ரப்பர் தாங்கிகள்

furniture glides : (அ.க.) அறைகலன் சறுக்கு : மேசை, நாற்காலி போன்றவற்றின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கிண்ணம் போன்ற உலோகத்துண்டுகள். இவற்றின் குவிவான பக்கம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பேர்து அறைகலன்களைச் சத்தமின்றி எளிதாக இடம் விட்டு நகர்த்தலாம்

furring : (க.க.) தளச்சமனம் : நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்ததுல்

furring strips : (க.க.) சமனப் பட்டைகள் : கடைசல் எந்திரத்தில் உள்ளது போன்று ஒரு பரப்புடன் இணைக்கப்பட்டுள்ள மரத்துண்டுகள்

fuse : (மின்.) மின்காப்பு உருகி : எல்லை மீறிய மின் வலியில் உருகி இடர் தடுக்கும் மின் இடையிணைப்பான உருகு கம்பி

fuse block : (மின்.) மின்காப்பு உருகிப்பெட்டி : மின்காப்பு உருகி கன்ளப் பற்றி வைத்துக் கொள்வதற்காக உருகி ஊக்குகளைப் பிணைப்பதற்கான ஆதாரப் பெட்டி

fuse clips : (மின்.) மின்காப்பு உருகி ஊக்குகள் : வெடியுறை உருகியின் உலோகப் பூண்களைக் கொண்டிருக்கும் விசையின் விற்சுருள் பகுதி

fuselage : (வானூ.) விமானச் சட்டம் : விமானத்தின் கட்டுமானச் சட்டம். இதனுடன் சிறகுகளும் வால்பகுதியும் இணைக்கப்படுகிறது

fuse link : (மின்.) உருகி இணைப்பு : வெடியுறை உருகியிலுள்ள உருகக்கூடிய பகுதி

fuse plug : (மின்.) உருகிச்செருகி : பார்க்க: செருகி உருகி

fuse wire : (மின்.) உருகிக் கம்பி : குறைந்த வெப்பநிலையில் உருகக் கூடிய ஓர் உலோகக் கலவையினாலான கம்பி

fusibility : உருகுதிறன் : ஓர் உலோகம் திட நிலையிலிருந்து ஆருதித் திரவ நிலை அடையுந்திறன்

fusible alloys : (வேதி.) உருகும் உலோகக் கலவைகள் : ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு வெப்ப நிலையில் உருகக்கூடிய உலோகக் கலவைகள்

fusible plug : உருகும் செருகி : எளிதில் உருகக்கூடிய மென்மையான உலோகத்தினால் அல்லது உலோகக் கலவையினாலான ஒரு செருகி. இது பித்தளை வார்ப்படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும். இது நீராவிக் கொதிகலத்தின் உலைமுகட்டில் பொருத்தப்பட்டிருக்கும். உலை முகட்டின் அளவுக்கு மட்டம் தாழ்வுறும்போது, இது உருகும். இதனால் வெளியேறும் நீரும் நீராவியும் தீயை அணைத்து விடும்

fusing point : உருகுநிலை : உலோகங்களும், உலோகக் கலவைகளும் உருகித் திரவமாகும் வெப்பநிலை

fusion : (இயற்.) உருகிணைப்பு : மிகப் பெருமளவு வெப்பத்தின்