பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

air tunnel: (குளி.) காற்றுப் புழை வழி: வலிந்து காற்றோட்டம் ஏற்படுத்தப்பட்ட ஒரு குளிர் பதனாக்கப் புழைவழி. இதன் வழியாகப் பொருள்களைச் செலுத்தும் பொழுது பொருள்கள் விரைவாகக் குளிர்ச்சியடைந்து உறைந்து விடுகின்றன

air washer: காற்று அலம்பி: காற்றைத் தூய்மைப்படுத்தவும், ஈரப்பதமாக்கவும் பயன்படும் நீர் தெளிக்கும் அமைவு

airway : (வானூ.) வானூர்தித்தடம்: சட்டப்படி நிலை நாட்டப்பட்ட வானூர்தி வழித்தடம்

airway beacon: (வானூ.) வானுர்தித் தட வழிகாட்டி: ஒளி விளக்கு: வானுர்தித் தடத்தின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக ஒரு வானூர்தித் தடத்தில் அல்லது அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வானூர்தி நிலையத்து வழிகாட்டி ஒளிவிளக்கிலிருந்து வேறுபட்டது

air worthiness:(வானூ. ) வானில் பறக்கும் தகைமை: வழக்கமான பறக்கும் நிலைமைகளில் வானில் இயங்குவதற்கு ஒரு வானூர்தியின் பொருத்தமுடைமையினையும் பாதுகாப்புடைமையினையும் குறித்துக் காட்டும் இயல்பு

aisle: (க.க.) இடைக்கழி: தேவாலயத்தில் அல்லது கூட்டம் நடைபெறும் அறையில் சூழிருக்கைகளுக்கு அல்லது இருக்கைகளுக்கு இடையில் உள்ளது போன்ற ஊடுவழி

alabaster: (கனி.) நிலாக் காந்தக் கல் அல்லது வெண் சலவைக் கல்: வெண்ணிறமான அல்லது வழ வழப்பாக மெருகேற்றிய கனிமக் கல் மணி

albany sand: (உலோ.) வெண்மணல்: வார்ப்பட வேலைக்குப் பயன்படும் ஒருவகை மணல்

albedo:(விண்) ஒளிபரப்பும்திறன்: கோளங்களின்மீது படும் ஒளியின் அளவுக்கும் மின்காந்தக் கதிர்வீச்சு மூலம் அது திருப்பியனுப்பும் ஒளியின் அளவுக்குமுள்ள விகிதம்

albertite: (கனி) ஆல்பெர்ட்டைட்: பளபளப்பான மையின் கரு நிறமுடைய, உடையத்தக்க, இயற்கைப் புகைக் கீல் (கருங்காரை)

albino: பாண்டு நோய்: தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ் சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பிடிப்பதுண்டு

album: சேகர ஏடு: ஒளிப்படங்கள், கையெழுத்துள்ள மேற்கோள்கள், அஞ்சல் தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு

albumen plate: வெண்கருந் தகடு: கல்லச்சுக்கலையில் பயன்படுத்தப்படும் இரு குருமிகையேற்றிய முட்டைக் கரைசலினால் ஒளியுணர்வூட்டப்பட்ட ஒரு தகடு

albuminoids : ஊன்புரதம்: கருப்புரதம் போன்ற, ஆனால் கரையாத பொருள். தலைமுடி நகங்கள் போன்றவை இதனாலானவை. சிறுநீரில் கருப்புரதம் இருந்தால், சிறுநீரக நோய் இருப்பதற்கு அறிகுறியாகும்

alchemy: (வேதி.) இரசவாதம்: மத்திய காலத்தில் புழக்கத்திலிருந்த ஒருவகை வேதியியல் முறை. மட்ட உலோகங்களை பொன்னாக மாற்றுவதும், நோய்களைக குணப்படுத்துவதும் இந்த வேதியலின் நோக்கம்