பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளெரி எஞ்சின்

gas pliers : (கம்) வாயுச் சாமணம்: சிறிய குழாய்களை அல்லது வட்ட வடிவப் பொருள்களைப் பற்றி எடுப்பதற்குப் பயன்படுத் தப்படும் இடுக்கிக் குறடு

gas producer : வாயு தயாரிப்பான் :வாயு தயாரிக்கும் உலை. இதில், எரிபொருளை வடித்திறக்குவதன் மூலம் நிலக்கரி வாயு தயாரிக்கப்படுகிறது

gas refrigerator : (குளி.பத) வாயு குளிர்பதனச் சாதனம் : வாயு எரிவதால் உண்டாகும் வெப்ப ஆற்றல் மூலம் இயங்கும் குளிர்பதனச் சாதனம்

gassing : (மின்) வாயுக் குமிழ்: மின்னேற்றிய சேமக்கலத்தில், மின்வேதியியல் வினை காரணமாக வெளிவரும் வாயுக் குமிழ்கள்,நெசவுத்தொழிலில், மெருகேற்றுவதற்காக பஞ்சுக் குஞ்சங்களை விடுதல்

gas turbine : (வானூ) விசையுருளை வாயு பீற்றுள்ளி விசைப் பொறியுருளையில் உள் ள து போன்று, விரிவடையும் வாயுக்களினால் சுழலும் ஒரு விசையுருளை

gas welding: வாயுப் பற்றவைப்பு; வாயுப் பிழம்பிலிருந்து கிடைக்கும் வெப்பத்தின் மூலம் பற்ற வைககும் ஒரு முறை

gate : (வார்.) வார்ப்பட வாயில் : ஒரு வார்ப்பட வடிவத்தை உருவாக்குவதற்காக உலோகத்தை ஊற்றுவதற்குள்ள வாயில்

gated pattern (வார்.) வாயில் தோரணி : ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு உலோகத் தோரணிகள் கொண்ட ஒரு தொகுதித்தோரணி. இதனைக் கொண்டு ஒரே சமயத்தில் பல வார்ப்படப் படிகளை எடுக்கலாம். சிறு உறுப்புகளைத் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது

gate-leg table: (மர.வே) மடிப்புக்கால் மேசை : மேசை வகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து ழுவதற்கு வசதியாகக் கதவுச் சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட மேசை

gate valve : (பொறி) வாயில் ஓரதர்: உள்வழி,புறவெளித் திறப்புகளிடையிலுள்ள ஆப்பு வடிவ வாயிலின் இயக்கத்தைப் பொறுத்து இயங்கும் ஓரதர்

gathering : (அச்சு.) ஒன்றிணைப்பு: புத்தக அச்சிட்ட முழு மடித் தாள்களைக் கட்டுமானம் செய்வதற்கு வரிசை முறையில் அடுக்கி ஒன்று சேர்த்தல்

gauge : (உலோ.) அளவி: (1) உலோக உறுப்புகளின் வடிவளவைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி அல்லது சாதனம். பல்வேறு நோக்கங்களுக்கான அளவிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்கள் உண்டு

(2) சாந்துக் கலவை விரைவாக இறுகுவதற்காகச் சாதாரணச் சாந்துடன் பாரிஸ் சாந்தினைக் கலத்தல்

(3) மட்டப் பலகை : தள மட்டத்தைக் கணிப்பதற்குக் கொத்தனார்கள் பயன்படுத்தும் சாதனம்

gauge : (குளி.பத) அளவை கருவி : வாயுவின் அழுத்தத்தை அல்லது திரவத்தின் மட்டத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி

gauge pins : (அச்சு) அச்சுச் சறுக்குச் சட்ட பிணைப்பூசிகள் : ஓர் அச்சு எந்திரத்தின் சமனத் தகட்டின் மீது வழிகாட்டியாகப்