பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
309

பயன்படுத்தப்படும் உலோகத் தகட்டுத் துண்டுகள்

gauging: அளவிடுதல்: (1) ஒரு பொருளின் வடிவளவு, ஒரு கலத்தின் கொள்ளளவு போன்ற வற்றை அளவிடுதல்

(2) செங்கற்களை அல்லது கற்களை ஒரே வடிவளவில் வெட்டியமைத்தல்

gauss, karl friedrich : (1777-1855) (மின்.) காஸ், கார்ல் பிரிட்ரிக்: ஜெர்மானியக் கணித மேதை. இவர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை கோட்டிங்கன் பல்கலைக் கழக வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகக் கழித்தார். கணிதம், வானியல், இயற்பியல் ஆகிய துறைகளில் துறை போகியவர்

gear : (எந்) பல்லிணை : பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், எந்திரத்தையும் அதன் துணைப் பொறிகளையும் இணைக்கும் சாதனம்

gear case : (எந்) பல்லிணைப் பெட்டி : பல்லிணைகள் இயங்குவதற்குரிய ஓர் உலோகப் பெட்டி. பொதுவாக, பல்லிணைப் பெட்டியில் மசகுப் பொருள் நிரப்பப்பட்டிருக்கும்

gear cutters: பல்லிணை வெட்டுக் கருவி: கடினமாக்கிய எஃகினாலான வட்டவடிவ வெட்டுக்கருவி. இது வெட்டும் பல்லிடைவெளிகள், இதன் வெட்டுவாயின் அளவினதாக இருக்கும்

gear driven super charger (வானூ.) பல்லிணை இயக்க உகைப்பான் : உந்துகலம், விமானம் முதலியவற்றில் பல்லிணைகளினால் இயங்கும் மீவிசை அழுத்த மூட்டுவதற்கான அமைவு

geared chuck : பல்லிணை எந்தமைவு : எல்லாவற்றிற்கும் பொருந்துகிற ஏந்தமைவு வடிவம்

geared head : பல்லிணைத் தலைமுனை: பின் பல்லிணை பொருத்தப்பட்ட தலை முனை

geared propeller : (வானூ) பல்லிணை முன்செலுத்தி: பல்லிணை மூலம் இயக்கப்படும் ஒரு முன்செலுத்தி, பொதுவாக இது எஞ்சின் வேகத்தைவிடச் சற்று அதிக வேகத்தில் இயங்கும்

geared pump: பல்லிணை இறைப்பான்: பல்லிணையைப் பயன்படுத்துவதன் மூலம் ஓர் எஞ்சினால் இயக்கப்படும் ஓர் இறைப்பான்

geared shaper : (எந்) பல்லிணை வார்ப்புப் பொறி: ஒரு பற்சட்டமும் இறக்கைப் பகுதியும், மெதுவாக வெட்டும் ஒரு திமிசினை விரைவாக இயக்கி வார்ப்புருவங்களை உண்டாக்குகிறது

gearing : பல்லிணைப்பு : பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு

gearing down: பல்லிணைப்பு: பல்லிணைச் சக்கரங்கள் இயக்கும் உறுப்பின் வேகத்தைவிட இயக்கப் பெறும் உறுப்பின் வேகத்தை மிகுதிப்படுத்துதல்

gear ratio : (தானி) பல்லிணை விகிதம் : இயங்கும் பல்லின் எண்ணிக்கைக்கும், இயக்கப்படும் பல்லிணைகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்

gear shifting: (தானி) பல்லிணை மாற்றுதல் : எஞ்சினுக்கும் மின் அச்சிக்குமிடையிலான வேக விகிதத்தையும்,விசையையும் மாற்றுவதற் காக மாற்று வேகப் பல்லிணைகளின் பல்வேறு தொகுதிகளைக் கொளுவியிணைத்தல்