பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

மண்டலம் போன்றவற்றை ஆராய்தல்

germanium : (வேதி.) ஜெர்மானியம் : எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத் தனிமம். மிகுந்த பளபளப்புடையது. இதன் உருகு நிலை 1562°F

german silver: ஜெர்மன் வெள்ளி: செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகிய உலோகங்கள் கலந்த ஓர் உலோகக் கலவை. வெள்ளி போல் வெண்ணிறமானது. நுண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது

gesso : ஓவிய உறைகள் : வண்ணந் தீட்டுவதிலும், சிற்பக்கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள்

get away speed: (வானூ) பறக்கும் வேகம் : ஒரு கடல் விமானம் முற்றிலுமாக வானில் பறப்பதற்கான வேகம்

ghost : இரட்டைத் தோற்றம் : தொலைக் காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட இரட்டைத் தோற்றக் குளறுபடி. ஒளி வாங்கி அருகில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள், குன்றுகள் முதலியவை சைகைகளைப் பிரதிபலிப்பதால் இந்தக் குளறுபடி ஏற்படுகிறது

gib : (எந்.) உலோக ஆப்பு : திர உறுப்புகளை இறுக்கமாகப் பொருத்துவதற்குப் பயன்படும் ஒரு மெல்லிய எஃகுத்துண்டு.கடைசல் எந்திரத்தில் குறுக்கு நழுவு சட்டத்தில் இது பயன்படுகிறது

gib headed key : ஆப்புத்தலை திறவுகோல் : கனத்த முனைக்கு செங்கோணத்திலுள்ள ஒரு கவர் முள் உடைய ஒரு திறவுகோல். இது அதனைத் திரும்ப எடுப்பதை எளிதாக்குகிறது

gilbert , (மின்.) கில்பெர்ட் ; காந்த இயக்க ஆற்றல் அலகு

gilbert,william : (மின்) கில்பெர்ட், வில்லியம் (1540-1603) : முதலாம் எலிசபெத் அரசி காலத்தில் வாழ்ந்த ஆங்கில மருத்துவர். இவர் முதன் முதலில் திசைகாட்டியின் செயல் முறையைக் கண்டு பிடித்தார். பூகோளக் காந்த விசை ஆய்வியலின் தந்தை எனப் போற்றப்படுவர்

gilding: பொன்முலாமிடுதல்: மின் முலாம் பூசுதல் மூலம் தங்க முலாமிடுதல் அல்லது தங்கத் தகட்டினால் கையால் பூச்சுவேலை செய்தல்.இந்தச் சொல் பெரும்பாலும் வெண்கலத் தூளினால் அல்லது திரவத்தினால் பூச்சுவேலை செய்வதைக் குறிக்கும்

gilt . பொன்பூச்சுமானம் : பொன் முலாமிடுதல் மூலம் இறுதியாகக் கிடைக்கும் மெருகு

gimbals : (உலோ.) எந்திரக் குழையச்சு : கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான எந்திரக் குழையச்சு அமைவு

gimlet : துரப்பணம்: மரவேலைத் துளைப்புக் கருவி

gimp: கெட்டி இழை: பூ வேலைப் பாடுகளில் சித்திர விளிம்புக் கெட்டி இழை. இது 33மீட்டர் கொண்ட துண்டுகளாக விற்கப்படுகின்றன. உயர்த்திய மேற்பரப்புடைய கனத்த கெட்டி இழை "கட்டு இழைக்கச்சு" எனப்படும், இது ஆடை விளிம்புகளில் இணைக்கப்படும்