பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
313

gimping : கெட்டி இழை: வேலைப்பாட்டில் சித்திர விளிம்புக் கெட்டி இழை அமைத்தல்

gin ; விதை நீக்குதல் : பருத்தியிலிருந்து விதைகளை எந்திரத்தினால் நீக்குதல்

ginger-bread work: : (க.க) குமிழ்மாட்டி வேலைப்பாடு : வீடுகளில் உள்ளது போன்ற, அலங்கார அல்லது நுட்பமான செவ்வொழுங்கு வேலைப்பாடு

gin pole : (பொறி.) பாரந்துக்கிக் கம்பம் : மரத்தால் அல்லது எஃகினாலான ஒரு செங்குத்தான கம்பம். இதில் கயிறு கப்பிக் கலனும், கட்டைகளும் கயிற்று வடம் அல்லது எஃகு வடத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு கனமான பொருள்களை எந்திரவிசையினால் வேண்டிய உயரத்திற்கு ஏற்றலாம். இது பளுதூக்கி போன்று பயன்ப்டுகிறது

giran dole: மெழுகுதிரிக் கொத்து விளக்கு: ஒரு மையத்தண்டினைச் சுற்றியுள்ள வட்டத்தில் பொருத்தப்படும் மெழுகுதிரிக் கொத்து விளக்கு

girder : (க.க) தூலம்: தள ஆதாரமாகப் பயன்படும் மரத்தாலான அல்லது எஃகினாலான பெரிய உத்தரம்

girt : முரண் கணிப்பீட்டளவை : (1) தட்டையாக இராத பரப்புகளில் மேடுபள்ளக் கணிப்புகளுடன் குறுக்காகவும், சுற்றியும் எடுக்கப்படும் அளவை

(2) நீள் உருளை ஒத்த அளவுடையவற்றின் சுற்றுப் பட்டை அளவு

glair: (நூ.க.)முட்டைப்பசை: முட்டை வெண் கருவிலிருந்து செய்யப்படும் மெருகுப் பூச்சுக்கான பசைப் பொருள்

gland : (எந்.) உள்திகைப்பு வாய் தாங்கி: காற்று முதலியவை உட்புகாதவாறு இயங்கவல்ல உள்திணிப்புப் பொறியமைவின் தாங்கி வாயை அடைத்துக் கொண்டு உந்துதண்டின் தேய்மானத்தைத் தடுக்கும் சிறிய தாங்கி

gland : (உடலி.) சுரப்பி ; உடலின் இயக்கத்திற்குத் தேவையான பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச் சுரப்பி, பால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, சீரணத்திற்கு உதவும் திரவங்களைச் சுரக்கும் கணையம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை

glare: (தாள்.) காகிதப் படரொளி: பளபளப்பான காகிதத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளி

glass : கண்ணாடி : மணல் அல்லது சிலிக்காவை சுண்ணாம்பு,பொட்டாஷ், சோடா அல்லது ஈய ஆக்சைடு இவற்றுடன் சேர்த்து உருக்குவதால் கிடைக்கும் கடினமான, ஆனால் எளிதில் உடையும் தன்மையுள்ள பொருள்

glass cloth : (குழை) கண்ணாடித் துணி : கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணி. இது பிசின் தகடுகளில் பயன்படுகிறது. இது ஒரு பொருளுக்கு வலிமையும், எஃகு போன்ற உறுதியும் அளிக்கிறது. கட்டுமானத்திற்குப் பலவகைப் பிசின்கள் பயன்படுகின்றன. பாலியஸ்டர் அவற்றில் ஒன்று

glass cutter: கண்ணாடி வெட்டி; கண்ணாடியை வேண்டிய அளவுகளில் அறுப்பதற்கு உதவும் ஒரு சாதனம். இது பெரும்பாலும்,கைப்பிடி கொண்ட ஒரு சுழல் சக்