பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
315

glow-tube: (மின்) ஒளிர் குழல்: ஜின்னழுத்தத்தை முன்றப்படுத்துகிற நியான் ஒளிர் குழல் போன்ற ஒளி வெளியிடும் குழில்

glucose : (வேதி.) பழ வெல்லம் : மரச்சத்திலிருந்து வெப்பமும் அமிலங்களும் வினைபுரிவதன் மூலம் உண்டாக்கப்படும் மணமற்ற ஒளிப்பான பாகுப்பொருள். கற்கண்டு, பழச்சத்துகள், வடிசாறுகள் முதலியவை தயாரிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படும் பொருள்

glue : வச்சிரப்பசை: விலங்கின் தோல், எலும்பு முதலியவற்றை உரிய அளவுக்குக் கொதிக்க வைத துப் பெறப்படும் திண்ணிய பசைப் பொருள். இது தகடாகவும், பட்டை களாகவும், மென்படலங்களாவும், குருணையாகவும் விற்கப்படுகின்றது. வெள்ளை,மஞ்சள், பழுப்பு முதலிய பல வண்ணங்களிலும் கிடைக்கிறது

glue injector : (மர.வே) வச்சிர ஊசி : மிக நுண்ணிய துவாரங்களுக்குள் விச்சிரப் பசையினைச் செலுத்துவதற்குப் பயன்படும் சிறிய கூரிய முனை கொண்ட ஓர் உலோகப் பீற்றுக் குழல்

glycerin : (வேதி) கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு : தொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கிப்பட்டு, மருந்துக்கும், பூச்சுநெய்க் களிம்புகளுக்கும், வெடிமருந்துக்கும் பயன்படுத்தப் படும் நீர்மப் பொருள். சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கும், ரொட்டித் தொழிற்சாலைகளிலும் அச்சக உருளைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற, திண்மமான திரவம்

glyph (க.க.) ஒப்பனைச் சால்வரி: சிற்ப வேலைப்பாட்டுக்கு அடையாளமாகவுள்ள குறுகிய செங்குத்தான ஒப்பனைச் சால்வரி

gneiss : (கனிம.) நிஸ் : படிகம் களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்த அடுக்குப் பாறை

go bo :ஒளித்திரை: மேடையில் தேவை யில்லாத இடங்களில் ஒளிபடாமல் மூடிமறைக்கப் பயன்படும் ஒரு திரை

goggles : காப்புக் கண்ணாடி : பற்ற வைப்பவர்களும், சாணை பிடிப்பவர்களும் கண்ணுக்குப் பாதுகாப்பாக அணிந்து கொள்ளும் கண்ணாடி

gold : பொன்/தங்கம் : உலோகங்களில் விலைமதிப்பு வாய்ந்த உலோகங்களில் ஒன்று. உலோகங்கள் அனைத்திலும் மிகவும் நெகிழ் விணக்கமுள்ள உலோகம்; கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது

golf ball : (கணிப்.) குழிப்பந்து:

gonio photo meter : படரொளிமானி : வண்ணப் பொருள்களின் படரொளியை அளவிடும் சாதனம்

go or no-go gauge : (எந்) இருமுனை அளவி : அளவிடுவதற்கான இருமுனைகளைக் கொண்ட அளவி. ஒரு முனையில் அளவிடப்பட வேண்டிய பொருள் நுட்பமாகப் பொருத்தப் பட்டிருக்கும். மற்றொரு முனை, வெளிப்புற விட்டத்திற்கு மிகச்சிறியதாகவும், உட்புற விட்டத்திற்கு மிகப்பெரியதாகவும் இருக்கும்

goose neck : வாத்துக் கழுத்து: வாத்தின் கழுத்தினைப் போல் வளைந்திருக்கும் கொக்கி, குழல், தாங்கி முதலியவை, கட்டிடங்களில் வாத்துக் கழுத்துப் போன்று வளைந்துள்ள படிக்கட்டின் கைபிடி

gordon press : (அச்சு) கோர்டோன் அச்சு எந்திரம்: அச்சுத்தாள்