பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
317

அல்லது தோலினாலான ஒரு சீப்பு போன்ற கருவி

gram : கிராம் : மெட்ரிக் சீரெடை முறையில் பொதுநிலை எடையலகு அளவு 1 கிராம் = 15. 432 நெல்மணி

gramme ring winding : (மின்) சீரெடை வளையச் சுருணை: இது ஒரு மின்னகச் சுருணை. இந்த முறை.இப்பொழுது மிகுந்த தனிவகைப் பயன்பாடுகளைத் தவிர்த்து, மற்றப்படி நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை

gram molecular weight : (வேதி.) அணுக்கட்டு நிறை : தனி மத்தின் அணு எடை அளவின் பரும அளவெண். ஒரு வாயுவின் அணுக்கட்டு நிறை யானது, இயல்பான சூழல்களில் 22.4 லிட்டர் அளவாக இருக்கும்

granite : (க.க) கருங்கல் : வெள்ளை அப்பிரகம் கலந்த கருங்கல். இது மிகவும் கடினமானது; மிகுந்த பளப்பளப்புடையது. கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது

gramular : மணியடர்த்தியுள்ள : இழையாக அமைந்திராமல் சிறு மணி போன்ற செறிவுள்ளது

granular carbon : (மின்) அக வரிக் கார்பன் : சிறுமணிகள் போன்ற அகவரிச் செறிவுள்ள சொரசொரப்பான மேற்பரப்புள்ள கார்பன். தொலைபேசி ஒலியனுப்பீட்டுக் கருவிகளிலும் மாற்றுத் தடைகளிலும் பயன்படுகிறது

granular structure : (குழை) அகவரிக் கட்டமைவு: அமைப்பான்கள் முழுமையாக ஒருங்கிணையாததன் காரணமாக பணிமுடிவுற்ற பிளாஸ்டிக் பொருட்கள், சொரசொரப்பான மேற்பரப்பினைக் கொண்டிருத்தல்

grape sugar : (வேதி) பழச் சக்கரை: இது அங்காடிகளில் கடினமான, மெழுகு போன்ற திடப் பொருளாகக் கிடைக்கும். தயாரான புதிதில் இது செறிமான முறாத பழவெல்லமாக அல்லது குளுக்கோசாக இருக்கும். ஒயின், ரொட்டி தயாரிப்பதிலும், புகையிலையைப் பக்குவப்படுத் துவதிலும், குரும உப்பு மூலம் தோல் பதனிடுவதிலும் பயன்படுத்தப்படுகிறது

graphic : வரையுரு : கருத்துக்களைப் படங்களாகவும், வரையுரு வங்களாகவும் சித்தரித்தல்

graphic arts :வரைகலை : ஓவியம், படம் வரைதல், சித்திரம் செதுக்குதல் போன்ற வரையுருக்கலைகள்

graphic building blocks : வரைகலைக் கட்டுமானத் தொகுதிகள்

graphic forms : வரைகலை வடிவங்கள்

graphic methods : வரைகலை முறைகள் : வரையுருவங்கள் வாயிலாகக் கட்டிடங்கள் மீதான அழுத்தம், வேகவீதம் முதலியவற்றைக் கணக்கிடுவதற்கான முறைகள்

graphic lines : வரைகலைக் கோடுகள்

graphic plotting: வரைகலை வரைதல்

graphic shapes : வரைகலை வடிவுகள்

graphite : (வார்;பொறி.) காரீயகம்: செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத்