பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

alcohol: (வேதி.) வெறியம்; சாராயம்; ஆல்கஹால்: C2H2OH. இது தானியங்களிலிருந்து தயாரிக்கப் படும் மெதில் ஹைட்ராக்சைடு அல்லது மெத்தனால் என்பதிலி லிருந்து வேறுபட்டது.

alcove: (க.க.) கவிகை மாடம்: ஒரு பெரிய அறையின் ஒதுக்குப்புறம். இது பொதுவாக ஒரு வில் வளைவு மூலம் பிரிக்கப்ப்ட்டிருக்கும்

aldehyde : (வேதி.) ஆல்டிஹைடு: CH2CHO. இது ஒர் அடிப்படைச் சாராயத்தின் முதலாவது உயிரக இணைவுப் பொருள்

algae: கடற்பாசிகள்: மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்கரையைத் தயாரித்துக் கொள்ள உதவும் பச்சையம் உள்ளது. ஈரணு நுண் பாசி போன்றவை மிகச்சிறியவை; கடல் தாவரங்கள் போன்றவை மிகப்பெரியவை. தேங்கிய நீர் நிலைகளில் மிதந்து செல்லும் மிக நுண்ணிய பாசி வகைகளில் பச்சையம் உண்டு

algebraic symbols : (கணி) இயற்கணிதக் குறியீடுகள் : கணிதத்தில் சில செயற்முறைகளையும், கணக்கீடுகளையும் குறிப்பதற்குப் பயன்படும் மரபுக் குறியீடுகள். எழுத்துகள், அடைப்புக் குறிகள் முதலியன

alginates : ஆல்ஜினேட் : ஒரு வகைக் கடற்கோரையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது குளிர்பாலேடு, முகக்குழம்பு, தீப்பிடிக்காத பொருள்கள், செயற்கைப்பட்டு போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது

align : (தானி.) வரிசைப்படுத்து: உருளைகளை ஒன்றோடொன்று பொருந்துமாறு வரிசைப்படுத்துதல்

alignment : (எந்.) வரிசைப்படுத்துதல் : கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்சிக்கும் பொருந்தும். இரண்டு அல்லது மூன்று முனைகளின் வழியாக ஒரே நேர்கோட்டில் சரியமைவு செய்தல்

alignment : ஒருநிலைப்படுத்துதல் : எந்திரங்களில் உறுப்புகளை ஒரே வரிசையில் ஒரு நிலைப்படுத்துதல்

alignment (வரை.) சரியமைவு: பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல்

alignment tool: (மின்.) சரியமைவுச் சாதனம் : ஒத்தியைவுறுத்தப்பட்ட சுற்றுவழிகளைச் சரியமைவு செய்யும் போது மையச் சலாகைகளையும் மின்னியல் உறைகலன்களையும் சரியமைவு செய்வதற்கான, மின்கடத்தாத, திருகுவகையிலான ஒரு சாதனம்

alive : (மின்.) இயக்கமுள்ள (1) மின்சாரம் பாயும் சுற்றோட்டத்தை அல்லது வெவ்வேறு அளவு ஆற்றலுள்ள, அண்டையிலுள்ள் இரண்டு தொடர்புகளைக் குறிக்கும் சொல் (2) கலைக்கப்படாமல் வைத்திருக்கப்பட வேண்டிய அச்சுக்கோத்த பொருட்கூறு

alizarin : (வேதி.) செஞ்சாயப் பொருள் : பருத்தி, கம்பளி, பட்டு