பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தொழிற்சாலைகளில் வார்ப்புப் பூச்சுப் பொருளாகவும் பயன்படுகிறது

graphite paint ; (வண்) காரீயக வண்ணம் : காரீயகமும், கொதிக்க வைத்த ஆளிவிதை எண்ணெயையும், சிறிதளவு உலர்த்து பொரு ளையும் கலந்த கலவை. இரும்பு வேலைகளில் வண்ணம் பூசுவதற்கு மிகவும் உகந்தது

graphitizing : (உலோ) காரீயக மாக்குதல் : ஒரு சாம்பல் நிற வார்ப்பிரும்பிலுள்ள கார்பனின் பெரும்பகுதியை ஒரு பதப்படுத்தும் முறையின் மூலம் காரீயக நிலைக்கு மாற்றுதல்

grate area or grate surface: ஒரு கொதிகலனில் கணப்புக் கம்பிகள் அமைந்த பரப்பளவு. இது சதுர அடிக்கணக்கில் கணக்கிடப் படும். இது முழுமையான உள்ளெரிதல் நடைபெறும் பரப்புக்குச் சமமானதாகும்

gravel: சரளைக்கல்: மணலும் கூழாங்கற்களும் கலந்த சரளைக் கலவை

graver : செதுக்கு உளி : சித்திரம் செதுக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவி

gravisphere: (விண்) ஈர்ப்பு மண்டலம் : விண்மண்டலக் கோளங்களில் மற்றக் கோளங்களை ஈர்ப்பதற்கான ஈர்ப்பாற்றல் முனைப்பாக உள்ள கோளப்பரப்பு

gravity : ஈர்ப்புவிசை : பூமியின் மையத்தை நோக்கி அல்லது அதன் மேற்பரப்பை நோக்கி பொருள்கள் அனைத்தும் ஈர்க்கப்படும் விசை

gravity cell ; (மின்) ஈர்ப்பு மின்கலம் : டேனியல் மின்கலத்தின் மாற்றியமைத்த வடிவம். இதில் இரு மின்பகுப்பான்கள் ஈர்ப்பு விசை மூலம் பிரிக்கப்பட்டிருக்கும்

gravity - drop annunciator : (மின்.) ஈர்ப்புவிசை அறிவிப்பான்: மின்காந்தங்கள் மூலம் இயங்கும் ஒரு சைகைச் சாதனம். இதில் காந்தத்திலிருந்து ஒரு கீல் உறுப்பு விடுபட்டு கீழே விழும் போது எண், பெயர் முதலியன வெளித் தெரியும்

gravity lubrication system : (தானி.எந்.) ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு : உயரத்திலுள்ள கொள்கலத்திலிருந்து ஈர்ப்புவிசை மூலம் உராய்வுத்தடைக்காக உறுப்புகளுக்கு எண்ணெய் பாயவிடுதல். இந்த அமைப்பு முறையில், எண்ணெய் ஓர் இறைப்பான் மூலம் அது முதற்கண் இருந்த கொள்கலத்திற்கே கொண்டு வரப்படுகிறது

gravity water system : ஈர்ப்பு விசைநீர் அமைப்பு : ஈர்ப்பு விசை மூலம் அழுத்தம் பெறப்படும் ஒரு நீர் அமைப்பு முறை

gravity well ; (விண்) ஈர்ப்புக் கேணி: ஈர்ப்புப்புலம் ஓர் ஆழமான கேணியாகக் கருதப்படும் பகுதி. ஒரு வான் கோளிடமிருந்து தப்புவதற்கு ஒரு விண் வெளி ஊர்தி இந்தக் கேணிக்குள்ளிருந்து ஏறி வெளியே வர வேண்டும்

gray iron : சாம்பல் வார்ப்பிரும்பு: தேனிரும்பு அல்லது வார்ப்பிரும்பு. இதில் முறிவு ஏற்படுமாயின், சாம்பல் நிறப்படிகக் கட்டமைவு உண்டாகும்

grease : (தானி.) மெழுகுப் பசை: தாவர எண்ணெய்களின் குழம்பும், சோடா அல்லது எலுமிச்சை சோப்பும் அடங்கிய ஒரு மசகு எண்ணெய்ப் பொருள்

grease gun : (தானி) மசகு பீச்சாங் குழல் : உயவுப் பொருளை தாங்கியினுள் பீச்சிச் செலுத்துவதற்கான ஒரு சாதனம்