பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

(2) மின்விசை நிலத்தொடர்பு : மின்சுற்று வழியை முற்றுவிப்பதற்காக மின்னாக்கி, மின்னியக்கி மின் விளக்கு முதலியவற்றுக்கு நிலத்தொடர்பு உண்டு பண்ணுதல்

(3) நிலத்தில் மின்கசிவு : மின்னோட்டம் தேவையான வேலைக்கு மாறாக, நிலத்தில் கசிந்துவிடுதல்

ground circuit : (மின்) நிலமின் சுற்றுவழி : இரண்டு அல்லது மூன்று கம்பி மின்சுற்று வழியில், நிலத்தை ஒரு கம்பியாகப் பயன்படுத்தும் ஒரு சுற்று வழி

ground clamp : (மின்) நிலப்பற்றுக் கட்டை: மின்தொடர்புகளைச் சிறந்தமுறையில் ஏற்படுத்து வதற்காக ஒரு குழாயுடன் ஒரு கம்பியை அல்லது பிற மின்கடத்தியைப் பிணைப்பதற்குப் பயன்படும் பற்றுக்கட்டை

ground detector : (மின்) நிலத்தொடர்பு நுண்கருவி : ஒரு மின் விசைப் பலகையில், ஒரு மின்சுற்று வழிக்கம்பியில் மண்தொடர்பு ஏற் படும் போது அதனைக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள விளக்கு

ground gear : (வானூ) தரைப் பல்லிணை : ஒரு பறவைக் கப்பலைத் தரையிறங்கச் செய்வதற்கும், அதனைத் தரையில் இயக்கு வதற்கும் தேவைப்படும் பல்லிணை அல்லது சாதனம்

grounding : (மின்) மின்விசை நிலத்தொடர்பு : மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறையில் ஒன்றாக இணைத்தல்

grounding conductor : (மின்) நிலமின் கடத்தி : நிலத்தொடர்பு மின் முனைனய அல்லது மின் முனைகளை கம்பியிணைப்புடன் பிணைப்பதற்குப் பயன்படும் மின் கடத்தி

grounding out: பின்னணியை அகற்றுதல் செதுக்கு வேலைப் பாட்டில் வடிவமைப்பின் பின்னணியை அகற்றுதல்

ground joint : (கணி) தேய்ப்பு மூட்டு : உறுப்புகளை உராய் பொருள் பசையுடன் சேர்த்துத் தேய்த்து அல்லது உராய் பொருளை எண்ணை யுடனோ நீருடனோ சேர்த்துப் பொருத்துதல். (உ.ம்) உந்துவண்டிகளின் ஓரதர்களைத் தேய்த்தல்

ground joist : நிலத்துலாக் கட்டை: நிலத்திலிருந்து மேல் நோக்கி எழுப்பப்படும் துலாக் கட்டை

ground loop : (வானூ.) தரைக்கரண வளைவு: விமானம் நிலத்தில் இயங்கும்போது அல்லது தரையிறங்கும் போதோ உயரே ஏறும் போதோ தரையில் ஓடும் போதோ கட்டுப்படுத்த முடியாமல் திடீரெனக் திரும்புதல்

ground re-turn : (தானி.மின்) நிலமீட்சி ; உந்து வண்டியில் மின்னியல் சாதனங்கள் அனைத்தும் முழுமையான மின் சுற்றுவழி அமையும் வகையில் அந்த வண்டியின் அடிச்சட்டத்துடன் மின்னியல் சாதனங்களை இணைத்தல்

ground speed : (வானூ) தரையோட்ட வேகம் : ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 290கி.மீ. ஆகும்