பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
325

gun powder : (வேதி.) வெடிமருந்து : துப்பாக்கி மருந்தாகப் பயன்படும் வெடி மருந்துக்கலவை. வெடியுப்பு, மரக்கரி, கந்தகம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. இது கருநிறமாகவோ சிவப்பு நிறமாகவோ இருக்கும்

Gunters chain : நில அளவைச் சங்கிலி : நில அளவையாளர்கள் பயன்படுத்தும் 20மீ. நீளமுள்ள நில அளவைச் சங்கிலி இதில், ஒவ்வொன்றும் 20செமீ நீள்முள்ள 100 கண்ணிகள் இருக்கும்

gusset : (பொறி.) வலிவுக் கொண்டி: வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் ஒரு முனைக்கு அல்லது கோணப் பகுதி வலுவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் இரும்பு வளையக் கொண்டி

வலிவுக் கொண்டி

Gutenberg, johann : (அச்சு.)கூட்டன்பர்க், ஜோகான் (1398-1468): நகர்த்தக்கூடிய அச்செழுத்து முறையைக் கண்டுபிடித்த ஜெர்மானிய அச்சுக் கலைஞர்

gutta-percha: (மின்.) மரப்பால் பிசின்: பல்வேறு மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பாலினால் செய்யப்படும் கட்டிறுக்கமான சாம்பல் நிறப் பிசின். இது பலவகைகளில் பயன்படுகிறது. முக்கியமாக மின் காப்பிடுவதற்குப் பயனாகின்றது

guttae : (க.க.) துளி ஒப்பனை : கிரேக்கச் சிற்ப வகையில் துளி போன்ற அணி ஒப்பனைகள்

gutter: (க.க.) (1) வடிநீர்க்கால்: சாக்கடை நீர் வழிந்தோடுவதற்காக தெருவோரமாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் (2) வாரி நீரோடை : தெருவில் நடைபாதையினையொட்டி செங்கல் அல்லது கல்பாவிய வடிகால் (3) வரிப்பள்ளப் பட்டிகை: அச்சுத் துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை

guy: (பொறி.) சமநிலைப் பிணிப்பான்: பாரந்தூக்கி, கூடாரம் முதலியவற்றைச் சமநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு

guy rope : (பொறி.) சமநிலைப் பிணிப்பு வட்டம் : துத்தநாகத்தால் மேற்பூச்சு பூசப்பட்ட வடம். இது ஒவ்வொன்றும் 7 கம்பிகள் கொண்ட 6 சரங்களையும், சணல் நார் உட்புரியினையும் கொண்டது

gypsum . (க.க.) கனிக்கல்: கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO42H2O). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அழைக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் கட்டுப்போடுவதற்கான காரைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்

gyrate: திருகு சுருள் : சுழல் அச்சினை திருகு சுருளாகச் சுற்றிச் செல்லச் செய்தல்

gyro horizon (வானூ.) திருகு சுருள் விளிம்பு : இது திருகு சுழல் கருவி. இது இயல்பான அடிவான விளிம்பினை ஒத்து விமானத்தின் பக்கவாட்டு உயரத்தையும் நீளவாட்டு உயரத்தையும் குறித்துக் காட்டுகிறது

gyro-pilot : , (வானூ.) திருகு சுழல் செலுத்தி : விமானத்தைத் தானாகவே திருகு சுழலாகச் சுற்றிச் செல்லச் செய்யக்கூடிய திருகு