பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

327

H beam:(க.க.) H வடிவ உத்தரம்: ஆங்கில எழுத்து 'H' போன்ற வடிவிலுள்ள எஃகு உத்தரம். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு விளிம்பு அகலங்களை பலவிதமாக இருக்கும் வகையில் அமைக்கப்படும் கட்டுமான வடிவம். இதில் விளிம்புகளின் உட்புறம் பெரும்பாலும் வெளிப்புறத்திற்கு இணையாக இருக்கும். இந்த வகை வடிவமைப்புகள், முக்கியமாகத் தூண்களின் வரிசை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது

உத்தரம் (படம்)

hackling textile: (நூற்.) சிக்கெடுத்தல்: நீண்ட சணல் இழைகளின் சிக்கலை ஏஃகுச் சீப்புக்கொண்டு சீவிச் சிக்கறுத்துத் துப்புரவு செய்தல்

hack saw : உலோக ரம்பம் : உலோகப் பொருட்களை வெட்டுவதற்கான ரம்பம். இதனை மின் விசையினாலோ, கையினாலோ இயக்கலாம்

உலோக ரம்பம்(படம்)

haemoglobin : (உடலி.) செங்குருதியணு : இரத்தத்திலுள்ள செந்நிறப் பொருள். இதில் 'குளோபின்' என்ற புரதமும், ஹேம்’ என்ற இரத்தச் சிவப்பு வண்ணப் பொருளும் அடங்கியிருக்கும்

haemophilia : (நோயி.) குருதிப் பெருக்குநோய்: சிறுகாயத்திலிருந்து இரத்தம் உறையாது பெருகிடும் ஒரு பரம்பரை நோய்

haermorrhage : (உடலி.) இரத்தப் போக்கு : குருதிக் குழாய்களிருந்து இரத்தம் வெளிப்படுதல்

haft: கைப்பிடி : குத்துவாள், தத்தி, தமரூசி போன்றவற்றில் உள்ளது போன்ற கைப்பிடி.

hair: (குழை.) மயிர்க்குச்சு : கால் நடைகளின் முடியிலிருந்து செய்யூப்படும் மயிர்க்குச்சு, இது முடிச்சிக்கல் எடுக்க உதவுகிறது. இப்போது முடிக்குப் பதிலாக கல்நார், மணிலா சணல் நார் இழைகளும் பயன்படுத்தப்படுகின்றன

hair hook : (குழை.) மயிர்க் கொக்கி: இரண்டு அல்லது மூன்று கவர் முட்கள் கொண்ட ஒருதருவி. இந்தக் கவர் முட்கள் ஒரு நீண்ட கைப்பிடியில் செங்குத்துக் கோணங்களில் பொருத்தப்பட்டிருக்கும். சுண்ணாம்புச் சாந்துடன் முடியினை இணைப்பதற்குப் பயன்படுகிறது

hair line : (அச்சு.) நுண்வரிக் கோடு : எழுத்து, அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக் கோடு

hair spring : (எந்.) கடிகாரச் சுருள்வில் : கடிகாரத்தில் துடிப்பியக்கச் சக்கரத்தை முதலில் ஒரு பக்கமும், பிறகு மறுபக்கமும் ஊசலாடச் செய்யும் ஒரு நுண்னிய சுருள் வில்

half bearings : (எந்.) அரைத் தாங்கிகள் : பாரம் எப்போதும்