பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

முதலியவற்றுக்குச் சாயமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பளிங்கு போன்ற வண்ணக் கூட்டுப் பொருள். இது மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான வண்ணத் தில் இருக்கும்

alkali : (வேதி.) காரப்பொருள் : இது ஒரு வலுவான உப்பு மூலம். ஒரு உப்பு மூலம், நீரில் கரையும் போது ஹைட்ராக்சில் என்ற மின் மியத் துகள்களை (அயனிகள்) உண்டாக்குகிறது

alkaline battery; (மின்.) கார மின்கலம்: இதனை 'எடிசன் மின் கலம்' என்றும் கூறுவர்.இதில் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருளாகப் பயன்படுகிறது. வினைத்திட்பம் வாய்ந்த நிக்கல் ஆக்சைடு துணுக்குகளும், இரும்புத்தூளுங்கூட இதில் பயன்படுகின்றன

alkaloids: . வெடியக் கலப்புப் பொருள்: தாவரங்களிலிருந்து பெறப்படும் கரிம ஆதாரமுடைய பொருள்களின் வகை. புகையிலிருந்து கிடைக்கும் நிக்கோட்டின், ஊமத்தையிலிருந்து பெறப்படும் ஹயோசின், கோக்கைன், கொய்னா, அபினி, எட்டிச்சத்து போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவை மனித உடலில் முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றால் தாவரத்திற்கு என்ன பயன் என்பது சரியாகத் தெரியவில்லை

alkanet:- (வேதி.) செஞ்சாயச் செடி: இது செஞ்சாயம் தரும் வேரையுடைய செடிவகை. மத்திய தரைக் கடற்பகுதியிலும், ஹங்கேரியிலும், மேற்கு ஆசியாவிலும் பயிராகும் இந்தத் தாவரம், ஒருவகைச் சிவப்பு வண்ணப் பொருளை விளைவிக்கிறது

alkyd resins: (வேதி. குழை.) ஆல்கிட் ரோசணம்: அரக்குச்சாயம், வண்ணங்கள், உலோக மெருகெண்ணெய்கள் ஆகியவற்றில் இந்த வகை ரோசணம் பயன்படுகிறது

allagation: (கணி.) கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு: ஒரு கலவையில் அடங்கியுள்ள அமைப்பான்களின் விலைகள், அவற்றின் விகிதங்கள், கலவையின் விலை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினைக் கண்டறிவதற்கான முறை அல்லது விதி

allen screws: (எந். ) ஆலன் திருகு: தலைமுனையில் அறுகோணமுடைய குதை குழிகளைக் கொண்ட தலைமுகட்டுத் திருகுகளும், செங்கோண முக்கோண திருகுகளும்

allen wrench: (தானி.) ஆலன் திருகுக் குறடு: தலைப்பகுதியில் புழையிட்ட அறுகோண வடிவத் துவாரத்துடன் தொடர் திருகுகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தனி வகைத் திருகுக் குறடு

allergy: ஒவ்வாமை; உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம், இழைம அழிவு ஆகியவை உண்டாதல். சிலருக்குப் பூச்சிகடிகள் ஒத்துக்கொள்வதில்லை. சிலருக்கு குதிரை மயிர் ஒத்து வராது

all-geared drive : (எந்.) அனைத்துப் பல்லிணை இயக்கி : வார்ப்பட்டைகளுக்கும் கிப்பிகளுக்கும் பதிலாக முற்றிலும் பல்லினைகளைக் கொண்டே ஒர் எந்திரத்தில் ஊட்டத்திற்கும் வேகத்திற்கும் ஆற்றலை அனுப்புதல்

alligator clip : முதலை தாடைப் பிடி ஊக்கு : தற்காலிக மின்கம்பி இணைப்புகளைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் முதலைத் தாடை போன்றிருக்கும், விற்சுருளால் இயங்கும் பிடிப்பு ஊக்கு