பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
329

மாறுபாட்டளவுப் புள்ளிகளைக் காட்டுகின்ற படம். இது ஒரு தகட்டில் ஓர் அங்குலப்பகுதியில் 55200 வரிகள் வரை நேர்த்தியாக வரியிடப்பட்ட கண்ணாடித்திரையில் ஒளிப்படம் செதுக்குருவாக்கம் செய்யப்பட்டிருக்கும்

halftone paper : (அச்சு.) நுண் பதிவுப் படத்தாள் : நுண்பதிவுப் படங்கள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பளபளப்பான அச்சுத்தாள்

half-wave rectifier : (மின்.) பாதி அலை மின்னோட்ட மாற்று கருவி : (வேதி.) ஒரு மாற்று மின்னோட்டச் சுழற்சியின் ஒரு பகுதி மட்டும் செல்வதற்கு அனுமதித்து எதிர் மின்னோட்டத்தை அனுமதிக்காதிருக்கிற ஒருமின்னோட்ட மாற்று கருவி

halogen : (வேதி.) உப்பீனி : ஃபுளோரின், குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை அடங்கிய தனிமங்களின் குடும்பத்தைக் குறிக்கும். இவை 'உப்பு உண்டாக்குபவை எனப்படும்

haived pattern : பாதியாக்கிய தோரணி : இரு சம பகுதிகளாக உருவாக்கப்பட்ட வார்ப்படத் தோரணி. இவ்வாறு செய்வதால் வார்ப்படம் செய்யும்போது எளிதில் வெளியில் எடுக்க முடியும்

halving : செம்பாக இணைப்பு : ஒரு பகுதியை ஓர் உறுப்பின் முகப்பிலிருந்தும், இன்னொரு பகுதியை அதனுடன் இணைக்கபடவிருக்கும் உறுப்பின் பின்பகுப்பிலிருந்தும் வெட்டியெடுத்து ஒன்றாக இணைத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் இணைக்கப்படும் இரு உறுப்புகளின் புறப்பகுதிகள் தடைபடா நேர்தளப்பரப்புடன் இருக்கும்

ham : (மின்.) பயில்முறை வானொலி (ஹேம்) : பயில் முறை அல்லது பரிசோதனை வானொலியைக் குறிக்கும் சொல்

hammer : சம்மட்டி / சுத்தி : உலோக வேலையில் ஆணி அறைதல் போன்றவற்றில் அடித்து இறுக்குவதற்குப் பயன்படும் சாதனம் அல்லது கருவி. இது பல வகைப்படும். ஒவ்வொன்றும் அதனதன் பயனுக்கேற்பப் பெயருடையவை

hammer movement : (கணிப்.) சுத்தியல் இயக்கம்.

hammer toe: (உடலி.) கால்விரல் கோணல்: கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருத்கும் அங்கக் கோணல்

கால்விரல் கோணல்(படம்)

hams language : (மின்.) பயில்முறை வானொலி குறியீட்டு மொழி : பயில்முறை வானொலி இயக்குபவர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் குறியீட்டு மொழி

handbill: (அச்சு.) துண்டறிக்கை: கையினால் வழங்குவதற்கான சிறிய அச்சிட்ட விளம்பர வெளியீடு

hand blocking : கைப்பட அச்சு : மெத்தை-திண்டு வேலையில் ஒரு வடிவமைப்பின் அச்சுருவை கையினால் எடுக்கும் முறை

handbook : கையேடு : கையில் எடுத்துச் செல்லக்கூடிய வழிகாட்டு நூல். பொறியியல் முதலிய ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான தகவல்கள், சூத்திரங்கள் அடங்கிய தனித்தனிக் கையேடுகள் உண்டு

hand brake : (தானி.) கைத் தடை : உந்து வண்டிகளில் கையினால் இயக்கப்படும் தடை. இது