பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

மிக நுட்டமான வரிப்பள்ளம். கூரியவிளிம்பு அல்லது கரடுமுரடான பரப்பு காரணமாக இது தோன்றுகிறது

heat latent : (குளி.பத.) மறைநிலை வெப்பம் : ஒரு பொருளின் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய வெப்பம்.எடுத்துக்காட்டு: ஆவியாக்க வெப்பம்

heat loss : (மின்.) வெப்ப இழப்பீடு : தடை காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பீடு

heat of condensation : (குளி. பத.) உறைமான வெப்பம் : ஒரு வாயு ஒரு திரவமாக மாறும் போது வெளியாகும் மறைநிலை வெப்பத்தினால் உண்டாகும் வெப்பம்

heat seal : (குழை.) வெப்ப முத்திரை : ஒருபொருளை அதனுடனோ, வோறொரு பொருளுடனோ வெப்பத்தினால் மட்டுமே பிணைத்தல் அல்லது பற்றவைத்தல்

heat sensible: (குளி. பத.) நுண்ணுணர்வு வெப்பம்: வெப்பநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்பம்

heat sensitive dye: (கணிப்.) அனல் ஏற்புச் சாயம்

heat specific: (குளி. பத.) வெப்ப அலகு எண்: பொருளின் பரும அலகின் வெப்பநிலையை ஒரு பாகை உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்ப அலகு எண்

heat time: (பற்.) வெப்ப நேரம்: அதிர்வுப் பற்றவைப்பு முறையில் ஒவ்வொரு மின்னோட்டத் துடிப்பின் காலநீட்சி

heat transmission : (குளி.பத.) வெப்ப அனுப்பீடு : வெப்பத்தைக் கடத்துதல், பரப்புதல் மற்றும் வெப்ப அலை பரப்புதல்

heat treating furnace: (உலோ ) வெப்ப உலை :உலோக உறுப்புகளை வெப்பத்தின் மூலம் பதப்படுத்தும் வாயுவினால் எரியும் உலை

heat treatment : (உலோ .) வெப்பப் பதனம் : எஃகினை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வெப்ப மூட்டி, மீண்டும் குளிரவைப்பதன் மூலம் மிக உயர்ந்த உழைப்புத் திறன் கொண்ட தாக்குதல். வெவ்வேறு எஃகுக்கு வெவ்வேறு பதனமுறை கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எஃகுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள பதனமுறையையே கையாள வேண்டும்

heat wave : (மின்,) வெப்ப அலை: ஊடகத்தின் அகச்சிவப்பு மண்டலத்திலுள்ள மின் காந்த அலை

heavy joist : (மர.வே.) கனத் துலாக் கட்டை 12-15செமீகனமும், 20செமீஅல்லது அதற்கு அதிகமான அகலமும் உடைய வெட்டுமரம்

hecto graph: கைப் படி பெருக்கி: கையெழுத்துப்படி எடுக்கும் கருவி

heel: (க.க.) உத்தர முனை: இறைவாரக் கையின் அல்லது உத்தரத்தின் முனை. இது சுவர் முகட்டு உத்தரத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும்

height : (க.க.) கவான் உச்சி : ஒரு கவானின் நாணின் மையக் கோட்டிலிருந்து அதன் வளை முகட்டின் உட்புற வளைவுக்குள்ள தூரம்

helical angle : (எந்.) திருகுசுழல் கோணம் : ஒரு திருகு சுழலின் அச்சுக்குச் செங்கோணத்தில் வரையப்படும் ஒரு கோட்டுடன் ஒரு திருகு சுழலின் அல்லது திருகின் பகுதி எதுவும் ஏற்படுத்தும் கோணம்

helical gear: (எந்.) ஏழுசுருள் பல்லிணை : இந்தப் பல்லிணையில்