பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
337

சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்டுகள், குறுக்கு வெட்டாமல், ஏதேனும் கோணத்தில் சாய்வாகவுள்ள சுழல் தண்டுகள் ஆகியவற்றிடையே விசையை அனுப்புவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது

helical groove : திருகு சுழல் வரிப்பள்ளம் : ஒரே சீராக முன்னேறுவதற்கென அமைந்துள்ள வரிப்பள்ளம் தனியொரு திருகு, சூழல் வரிபள்ளத்தில் ஒரு சுழற்சியில் முன்னேறும் அளவினை "இடைத்தொலையளவு" என்பர். இருவரிப்பள்ளம், மூவரிப்பள்ளம் போன்ற பலவரிப்பள்ளங்களில்: ஒரு சுழற்சியில் ஏற்படும் முன்னேற்றத்தின் அளவு, 'முந்து நிலை அளவு' எனப்படும்

helical spring : திருகுசுழல்விற்சுருள் : ஒரு கூம்பின் ஒகு அடிக் கண்டம் போன்று வடிவுடைய அழுத்தும் வகை விற்கருள்

helicoid : திருகுசுருள்: ஒரு திருகு சுழலை ஒத்திருக்கும் வகையில் சுருளாக்கப்பட்ட சுருள்

helicopter :(வானூ) உலங்கு வானூர்தி : செங்குத்தான மேழும்பி இறங்கவல்ல விமானம். இது உலங்குபோன்று முன்னேயும், பின்னேயும், பக்கவாட்டிலும் பறக்கக்கூடியது. அத்துடன் இது அந்தரத்தில் நகராமல் பறக்கக் கூடியது. ஐகோர் சிகோர்ஸ்கி முதலாவது உலங்கு வானூர்தியைத் தயாரித்தார்

heliport or helipad : (வானூ) உலங்கு வானூர்தித் தளம் : உலங்கு வானூர்திகள் தரையிறங்கவும். உயரே எழுந்து பறக்கவும் பயன்படும் பரப்பு

helium : பரிதியம்/ஹீலியம் : மிக அரிதான தனிமங்களுள் ஒன்று. இது சிலவகை யுரேனியம் தாதுக்களிலும், சிறிதளவு காற்றிலும் கலந்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் கிடைக்கும் இயற்கை வாயுவிலிருந்துதான் இது முக்கியமாகக் கிடைக்கிறது

helix : திருகுசுழல் : ஒரு நீள் உருளையைச் சுற்றியுள்ள புரியிழையைச் சுழற்றுவதன் மூலம் உண்டாகும் வளைவு. இதில் ஒவ்வொரு சுழற்சியின்போது ஒரே அளவான முன்னேற்றம் ஏற்படும்

helix angle : (எந்) திருகு வட்டக்கோணம்: அச்சுக்கும் செங்குத்தாகவுள்ள ஒரு தளத்துடன் இடைத்தொலையளவு விட்டத்தில் புரியிழையின் திருகுசுழல் ஏற்படுத்தும் கோணம்

hellbox : (அச்சு.) கூளப்பெட்டி : அச்சுத்துறையில் உடைந்துபோன அச்செழுத்துக்களும், மற்ற பயனற்ற அச்சுப் பொருட்களும் போட்டு வைக்கப்படும் பெட்டி

helper : உதவியாளர் : தேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உதவியாகவும், அவருடைய பணிப்புரையின் படியும் பணிபுரியும் உதவியாளர்

helve : கோடரிக்காம்பு : ஒரு கோடரியின் அல்லது கைக்கோடரி கைப்பிடி

'hematite : ஹேமட்டைட்: முக்கியமான இரும்புத் தாது

hemecolloids : ஹெம்கோலாய்டுகள் : 20-000 மோனோமெரிக் அலகுகளுக்குச் சமமான அளவுக்கு மீச்சேர்ம இணைவுக்கு நேரிணையாக, 10,000வரை அணுஎடை கொண்ட் மீச்சேர்மங்கள், குறைந்த குழைம நிலையுடைய கரைசல்களில் இவை பொங்குதலின்றிக் கரையும். கரை