பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

alligator, wrench : முதலைத் தாடைத்திருகுக் குறடு: முதலைத் தாடை போன்று V-வடிவத் தாடை கொண்ட திருகுக் குறடு

alligatoring : (வண்ணம் மற்றும் ஆரக்குச் சாயம்) கீறல் வெடிப்பு: மேற்பரப்பு அடுக்கில் மட்டுமுள்ள கீறல் வெடிப்புகள். வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் சுருக்கம். பிணிப்பு இன்மை, ஒரு படலத்திற்கும் இன்னொரு படலத்திற்குமிடையில் உலர்வதற்குப் போதிய நேரம் இல்லாமை, போதிய அளவில் ஊடுருவாமை, மென்மையான படலத்தின் மீது கடினமான படலத்தைப் பூசுதல் போன்றவை காரணமாக இந்தக் கீறல் வெடிப்புகள் மேன்மேலும் விரிவடைகின்றன

allotropic : (உலோ.) அனுத் திரிபுள்ள : பொருண்மை மாறாமல் அணு அமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்; ஒரு தனிமம் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெல்வேறு வடிவங்களில் இருக்கும் நிலை

allotropic : (வேதி.) அனுத் திரிபுள்ள : ஒரே பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களையுடையனவாக இருத்தல் எடுத்துக்காட்டு: கரிமத்தின் வடிவங்களான வைரம் மற்றும் நிலக்கரி

allover pattern : (கலை.) முழு மயப்பாங்கம்: ஒரு மேற்பரப்பு முழுவதிலும் ஒரே பாங்கம் திரும்பத் திரும்ப வருமாறு அமைத்தல்

allowance (எந்.) கழிவிடையீடு: கரட்டுத்தள உருளைகளிடையே வேண்டுமென்றே விடப்படும் குறும இடைவெளி அல்லது பெரும இடையீடு

allowance : ( உலோ.) இசைவளவு : இணையும் உறுப்புகளிடையிலான பரிணாமங்களில் வேண்டுமென்றே அமைந்த வேறுபாட்டளவு

alloy:( உலோ.)உலோகக் கலவை:

(1) வெள்ளை உலோகம். உராய்வு தடுப்பு உலோகக் கலவை

(2) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒரு சீரான கலவை. பொதுவாக ஒர் உயர்ந்த உலோகத்துடன் ஒரு மட்ட உலோகத்தைக் கலத்தல்

(3) செயற்கை ரோசணங்களின் கலவை (குழைமவியல்)

alloy steel : ( உலோ. வே.) கலவை எ.கு: மாங்கனிஸ், நிக்கல், டங்ஸ்டன், மாலிப்டினம், வனேடியம், குரோமியம் போன்ற உலோகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களுடன் எஃகைக் கலந்து தயாரிக்கப்படும் எஃகுக் கலவை. இந்தக் கலவை எஃகு, வலுவாகவும் கடினமாகவும் இருக்கும்

all - rowlock wall : (க. க. ) அனைத்து உலகமிண்டுச் சுவர்: இரு புறமும் சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள ஒரு சுவர். இதில் முனை மாற்றி மாற்றிச் சுவரின் முன் பகுதிக்குச் செங்கோணத்தில் கல் அல்லது செங்கல் பொருத்தப்பட்டிருக்கும்

alluviul : வண்டல் மண் : ஆறுகளில் படியும் வண்டல்மண்

almandite : ( கனி.) செம்மணிக்கல்: செந்நிற ஒண் மணிக்கல். கனிமத்தில் ஒருவகை. காகிதத்திலும் துணியிலும் தேய்த்து மெருகேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவது

alnic : (உலோ.) அல்னிக்: அலுமினியம் நிக்கல், கோபால்ட் ஆகியவற்றின் கூட்டிணைவினால் உண்டான ஒர் உலோகக் கலவை. சிறிய நிரந்தர்க் காந்தங்கள் செய்யப்